06-20-2003, 02:56 PM
என்னப்பா நண்பர்கள். இடியப்ப மெசின் கேட்டால் என்னை சீதணத்தோட கலியாணம் கட்டச்சொல்லுறியள். இன்னொரு கலியாணம் கட்டினால் என்ர மனிசி அடிக்க வராதே? அதுக்கு ஆர் பொறுப்பு?
அது சரி எப்பதான் இந்த சீதண மாயையிலிருந்து எங்கட சனம் விடுபடுமோ தெரியா. ஏனடா தம்பி உங்களுக்கு முதுகெலும்பு இல்லயே. உழைச்சு சம்பாதிக்க முடியாதே. கைகால் ஏதும் வழங்காதே? சும்மா ஒரு பேச்சுக்கு சொல்லுறன் இலங்கை காசுக்கு ஒரு 10 லச்சம் வாங்கிறியள் எண்டு வைப்பம். அதுகளுக்கு அது பெரிய காசுதான் ஆனால் வெளிநாட்டில இருக்கிறவைக்கு அது பிச்சைக்காசு (எனக்கெண்டால் அது 2 மாச சம்பளத்தை விட குறைவு உங்களுக்கு எப்பிடியோ). இந்த பிச்சைக்காசை வாங்கிறதை விட சீதணம் வேண்டாமெண்டு சொன்னால் அதுகளும் சந்தோசப்படும். உங்களுக்கும் மதிப்பாய் இருக்கும். (நானெண்டால் அப்படித்தான் செய்தனான். அதுக்காக love பண்ணி முடிச்சனான் எண்டு நினைகாதயுங்கோ. அம்மா பேசினதை தான் செய்தனான்.)
அம்மா நளாயினி நானும் கனடாவுக்கு சென்றமுறை போனபோது தேடாத இடமில்லை. தயவுசெய்து குறிப்பா எங்கே வாங்கலாம் என்பதை உங்கள் நண்பியிடமிருந்து அறிந்து சொல்லுறீங்களா? உதவியாக இருக்கும்.
சேது எனக்கு வேண்டியது இடியப்ப உரல் இல்லை. இடியப்ப மெசின். இடியப்ப உரல் என்னட்ட ஏற்கெனவே கிடக்கு.
அன்புடன்
சுதர்ஷன்