03-13-2005, 04:07 PM
திரு தமிழ் வாணன் அவர்களே, நான் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கட்டுரை படித்தேன். அதில் நீங்கள் குறிப்பிட்டதனை போன்று. ஆரியரின் வருகைதனை அடுத்தே தமிழ் கடவுளான முருகனுக்கு இரண்டு துணைவியார்கள் இருப்பதனை போன்று ஒரு தோற்றம் உரு பெற்றது என கட்டுரையாளர் சொல்கின்றார். அதாவது கிரேக்க கடவுள்களில் ஒரு கடவுளாகிய டெனிஸ் என்னும் கடவுளை வளிபட்டவர்ர்கள், இந்த டெனிஸ் என்னும் கடவுளை அவர்கள்( ஆரியர்கள்) பின்னாளில் ஸ்கந்த என்று அளைத்தார்கள். தமிழ் கடவுளாகிய முருகனை அறிந்ததும். முருகனை தங்கள் கடவுளாகிய ஸ்கந்தன் என அவர்கள் ஏற்றுக்கொண்டு வளிபட்டதாகவும். ஏற்கனவே முருகனுகு வள்ளி என்னும் துணைவி இருந்தாலும். ஆரியரின் கடவுளாகிய ஸ்கந்தவுக்கு தேவயானை என்னிம் துணைவி இருந்தமையாலும். பின்னாளில் ஸ்கந்த + முருகன் என்னும் இருகடவுள்களும் ஒன்றுதான் என ஆரியர்கள் எண்ணியதாலும். முருகனுக்கு இரண்டு துணைவிகள் ஆனதாக அந்த கட்டுரையில் நான் படித்தேன். இதில் எவ்வளவுக்கு உண்மை உண்டு என்பது பற்றி எனக்கு தெரியாது. ஆனால் இதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். காரணம் இந்து என்னும் சொல் கூட கிரேக்கத்தில் இருந்து வந்ததுவே.

