03-13-2005, 03:54 PM
tamilini Wrote:கனடாக்காரனும் வரவில்லை
கரன்சியைப் பாத்து
நான் ஏங்கவும் இல்லை
கற்பனையாம் கற்பனை
கண்டறியாத கற்பனை
உன் கண்களின் பார்வையையே
காதல் மொழியாய் கொண்டு
காதலித்தவள்
கனடாக்காரனை பின்தொடர்ந்தாள்
என்று கற்பனை பண்ணிக்கதைக்கிறானா..??
பேசியது கண்கள் தான்
உன் வாயல் ஊனம்
விழுந்த வார்த்தைகள் பேசி
என் காதலைக் கொச்சைப்படுத்தாதே
உன் காதல் கிடைக்காமல் போனது
இத்தனை காயம் தரவில்லை
உன் வார்த்தைகள் வதைக்கிறது
அன்பை புரிந்து கொள்ளத்தெரியாத
அற்பன் நீ
அலட்டாதே
என் அன்பை நீ புரிந்து கொள்
என்று உன்னிடம் மடிப்பிச்சையா கேட்டேன்
கண்டபடி கதை கட்டாமல் இரு
அது போதும். உன்னை
நான் காதலித்ததற்காய்.
:evil: :evil:
அன்பன் என்று ஆர்பரித்தவளே
அடுத்த நிமிடமே
அற்பன் என்பதும் நீதான்..!
கனகாலம் காணாக் கண்களை
கனவிற் கண்டு
கதைவிடுவதும் நீதான்...!
காதல் கொண்டவள்
கனத்த பழிவரினும்
கண்ணியமாய் தன் பழி
தான் சுமப்பாள்
தன்னவன் மீதோர் பழி வந்தால்
வருந்தி அதையும் சுமப்பாள்
மெளனமாய்...!
நீயோ...
குற்றம் செய்து குறையும் பிடிக்கிறாய்
பக்கத்தில் அவளிருக்க
என் கண்கள் உன்னோடு பேசுவதாய்...!
இதை அவள் கேட்டால்
என் வாயில் வார்த்தை இல்லையடி
அசடுதான் வழியும்...!
விதி வழி பழியில்லை
வார்த்தைகள் மெளனமாக்கி
காதலை மொட்டிலே கருக்கியவள் நீயடி..!
அன்றே... கண்ணோடல்ல
என்னோடு அன்பிருந்திருந்தால்
ஒரு வார்த்தை உதிர்ந்திருப்பாய்
உனக்காய் வாழ்வதாய்...!
இன்று....
என் கண்கள் கதை பேசுவதாய்
கதைவிட்டுக் கண்ணியம் தேடுறாய்
கண்கெட்ட உலகம்
அதைக் கண்டு
உனக்காய் கண்ணீர் விடாதோ என்ன...??!
இதுதானடி கன்னியர் நீவீர்
படைத்துவரும் புதிய உலகத் தத்துவம்...!
:wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

