03-13-2005, 01:18 PM
Sabesh Wrote:Quote: இங்கு சில ஆண்கள், பெண்கள் சமத்துவம் அடைந்து விட்டார்கள் அல்லது தாம் சம உரிமை கொடுத்து வைத்திருக்கிறோம்/கொடுப்போம் என்று முழங்குகிறார்கள். இது எல்லாம் ஊருக்கு உபதேசம் உனக்கல்லடி மகளே என்ற வகையினைச் சார்ந்தது.
பெண் அடிமை எண்டு என்னத்தை சொல்றிங்கள்?
என்னத்திலை சமத்துவம் இல்லை எண்டு யாராவது சொன்னால் கருத்து சொல்ல இலகுவாக இருக்கும்.
பெண்கள் எல்லாம் ஆண்கள் அணியும் உடை அணிகிறார்களே, ஆண்கள் மட்டும் ஏன் சேலை கட்டக் கூடாது எண்டு கேட்டால் என்ன பதிலைச் சொல்லுவதென தெரியவில்லை.
அதைத் தான் சமத்துவம் எண்டுறிங்களோ?
காலையிலை வெளியில் போகும் போது, காரில்; உள்ள (snow) ஜ்சை தட்ட சொல்ல மனைவி கேட்டா, "என்ன என்னைத் தட்ட சொல்றிங்கள்" எண்டு
நான் சொன்னேன் "யாழ் களத்திலை, பெண்களுக்குச் சமத்துவம் குடுக்கிறதில்லை எண்டு எல்லாரும் புலம்புகினம், அது தான் எனிச் சமத்துவம் தருவோம்" எண்டு சொன்னேன்.
அதற்கு அவாவின் பதில் "எனி யாழ் கழத்துக்கு போகாதைங்கோ"
அவாவே சமத்துவம் வேண்டாம் எண்டுறா... அதுதான் என்ன செய்யலாம் எண்டு யோசிக்கிறேன்.
சபேஸ் சமத்துவம் என்பதை நீங்களும் உங்கள் மனைவியும் இன்னும் புரிந்து கொள்ளத்தன்மையையே உங்கள் கருத்து தெளிவுபடுத்துகிறது.
சேலையணியலாமா ää ஜ}ன்ஸ் அணியலாமா சிகரெட் பிடிக்கலாமா ஆண்கள் சமைக்கலாமா ஆடைதுவைக்கலாமா என்பதற்கான சமத்துவத்துடன் மட்டும் நிற்கும் உங்களது நற்சிந்தனை நியாயப்படுத்த உங்கள் மனைவியையும் துணைக்கு சேர்த்து உங்கள் பக்கத்து உள்மனதில் படிந்துகிடக்கும் ஆதிக்கச் சிந்தனையைத்தான் இங்கு வெளிப்படுத்தியுள்ளீர்கள்.
உங்கள் மனைவிக்கான சமத்துவம் பற்றி இங்கு யாரும் கருத்தெழுதியதாய் தெரியவில்லை. எங்காவது ஓரிரண்டு பெண்களின் நிலையை வைத்து ஒட்டுமொத்தமான பெண்களின் நிலையும் இதுதான் என்பது போன்ற சிந்தனாவாதப்;போக்கு மாறாதவரை இத்தகைய வாதங்களும் வதைகளும் தொடர்கதைதான்.
:::: . ( - )::::

