03-13-2005, 02:48 AM
Quote:என் கண்கள் பேசும் போது
உன் கண்கள் சந்தித்து
நம் கண்கள் ஆகியதை
எப்படி மறந்தாய்?
வாழ்க்கை வாழ்வற்கே
அதையே தான் நானும் சொல்கிறேன்
அதனால் தானே இன்றும்
என்னில் வாழ்கிறாய் நீ
உன்னை சுமந்து வாழும்
வாழ்விலே சுகம் கண்டேன்
தோழனே....
உன்னை சுமந்து வாழ்வதில்
வருத்தமேது?
உன்கண்கள் பேசி
என்கண்கள் சந்தித்து
நம் கண்கள் ஆகியதா
பேதைப் பெண்ணே!
நம் கண்கள் ஆகியதாய்
நானுணர்ந்தால்
நானுனை பிரிவேனா
தோழி
நானுணரா உன் விழியின் மொழி
நீயேயுணரா உன் விழியின் மொழி.......
இதற்காய் காத்திருப்பா
என் நினைவு சுமந்து
வாழ்வாயா?
வேண்டாமே என் தோழி.......
என் நினைவை நீ சுமந்து
வாழ்வதுவா மகிழ்ச்சி
என்ன பேதமை பெண்ணே.....
இலக்கிய மாயை
இன்னுமா போகவில்லை............!
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

