03-13-2005, 02:36 AM
Quote:கடந்த காலத்தை எண்ணி
கண்ணை கசக்காது.
காரியத்தில் கவனமாக இருந்து விடு.
பருவங்கள் மாறுவதப் போல்,
வாழ்விலும் வளைவுகள்
வளைவுகள் வரலாம்,
அதற்காக நேற்றய காதலனுக்காய்
தவங்கள் இருப்பது தவறு.
தவங்கள் இருப்பது
வாழ்வை வெறுத்தவர்.
நீயோ வாழ பிறந்தவள்.
தாடி வளர்ப்பதும்
தாலி அறுப்பதும்,
மோடர்கள் வேலை.
நீ அறிவுடயாள்.
எனவே ஆரோக்கியமான
பாதை எதுவென அறிந்து
வீறுநடை போடு.
போற்றும் இந்த வையகம் உன்னை.
அன்பு உள்ளவனோ உள்ளவளோ உன்னை சுற்றி வருவார்.
நீ ஏன் அன்பு இல்லாதாரை சுற்றுகின்றாய்?
கடந்த காலம் என நான்
கருதவில்லை என் காதலை
காலத்தையும் வென்று
வீறு நடை போடும்
என் காதலை எப்படி நான்
புதைப்பேன் என்னுள்
காலம் மாறி மாறி வந்தாலும்
காதல் கொண்ட உள்ளம் கலங்காது
காத்திருக்கவில்லை காதலனுக்காக
ஏனென்றால் நான் தானே வாழ்கிறேன்
புனிதமான காதலுடன்
பூமி சுற்றுவதை நிறுத்திவிட்டாலும்
அவனை சுற்றிவரும்
நினைவுகள் நிற்காதே என்றென்றும்.....
" "
" "
" "

