03-12-2005, 04:07 PM
இங்கு சில ஆண்கள், பெண்கள் சமத்துவம் அடைந்து விட்டார்கள் அல்லது தாம் சம உரிமை கொடுத்து வைத்திருக்கிறோம்/கொடுப்போம் என்று முழங்குகிறார்கள். இது எல்லாம் ஊருக்கு உபதேசம் உனக்கல்லடி மகளே என்ற வகையினைச் சார்ந்தது.
தாயகத்திலும் புலத்திலும் பெண்கள் உழைக்க ஆரம்பித்துவிட்டார்கள்தான், என்றாலும் அவர்கள் சராசரியான வேலைக்குத்தான் செல்கிறார்கள். உதாரணமாக ஊரில் ஆசிரியர், லிகிதர், மற்றும் கணக்காளர் போன்ற வேலைகள்தான் பெண்கள் செய்கிறார்கள். தீர்மானங்கள் எடுக்கக்கூடிய பெரிய வேலைகளில் பெண்கள் பெரும்பாலும் அமர்த்தப்படுவதில்லை.காரணம் ஆணாதிக்கம்தான்.
சில வருடங்களுக்கு முன்னர் சுபமங்களாவில் சோ பெண்ணியத்தைப் பற்றிக் கூறிய கருத்துக்களை உங்களுக்காகத் தருகின்றேன்.
<b>பெண்களைப் பற்றி உங்களுடைய அபிப்பிராயம் பெரும்பாலும் பெண்களுக்கு எதிராகவே இருந்து வருகின்றன. இந்திராகாந்தியையும், ஜெயலலிதாவையும் அவர்கள் பெண்களாக இருப்பதால்தான் இந்த அளவுக்கு எதிர்க்கிறீர்கள் என்று ஒரு அபிப்பிராயம் கூட இருக்கிறது.</b>
இந்திராகாந்தி, ஜெயலலிதாவை விட்டு விடுங்கள். அவர்கள் பெண்கள் என்பதால் அவர்களை கடுமையாக விமர்சிக்கிறேன் என்பது சரியல்ல. ஆனால் பொதுவாக பெண்கள் விடுதலை என்ற பெயரில் நடப்பதை நான் ஒத்துக்கொள்ளவில்லை. அவர்கள் அடிமைப்படுத்தப்பட்டு விடது போலவும், ஆண்கள் அவர்களை அடக்கி தலையெடுக்க விடாமல் செய்து விடுகிறார்கள் என்று கூறுவதெல்லாம் 'நான்சென்ஸ்' என்று நினைக்கிறேன். ஆண்கள் பக்கமும் தவறுகள் இருக்கலாம். அதனால் என்னை Male chauvinist என்பார்கள். ஜெயலலிதா என்னை Male Chauvinist என்றுதான் சொல்வார். பெண்கள் அடக்கி வைக்கப்படவில்லை. Liberation from what? ஆண்பிள்ளை சமைத்தால்தான் சமத்துவம் என்கிறீர்களா? இன்றைய நிலையில் பெண்களுக்குப் பரிபூரணசுதந்திரம் தரப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பிடிக்காத வாழ்க்கையிலிருந்து அவர்கள் வெளியேறிவிடக் கூடிய சுதந்திரம் இருக்கிறது. அப்படியிருக்கும்போது, பெண்ணடிமைத்தனம் எங்கிருந்து வந்தது? இதெல்லாம் சும்மா. எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை.
<b> நமது சமுதாயத்தில் பெண்களின் பங்கு என்ன என்று நினைக்கிறீர்கள்?</b>
நர்ஸ், டீச்சர் இந்த வேலைகள்தான் பெண்களுக்கு ஏற்றவை என்று நினைக்கிறேன். வீட்டைக் கவனிப்பதற்கு ஒரு ஆள் வேண்டும். பிள்ளைகளைக் கவனிப்பதற்கு ஒரு ஆள் வேண்டும். கணவனின் சம்பாத்தியம் போதாத நிலையிலுள்ள குடும்பங்களில் பெண்களும் வேலைக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. அது போன்ற குடும்பங்களில் குழந்தைகளைக் கவனிப்பது பிரச்சினையாக இருக்கிறது. குழந்தைகளைக் கவனித்துக் கொள்கிற விஷயத்தில், ஆணை விடம் பெண்ணே ரொம்பப் பொருத்தமானவள்.
சோ போன்ற பெண்ணிய சிந்தனையாளர்கள்தான் இக் களத்தில் கருத்தாடும் சிலர். உண்மை உறைத்தாலும் என்னுடன் சண்டைக்கு வராதீர்கள்.

<b> . .</b>