06-20-2003, 02:55 PM
போராளிகள் படைப்பு
அனலின் தகிப்பு
கடுங்கோடை காலம்
உப்பு வெளிக்காற்று வந்து
மேனி உரசிச்செல்லும் நேரம்
கந்தை உடையுடன்
காவலரண் மேட்டினிலே
காலை, மாலையென கண்ணயர
நேரமின்றி - எம்
கடமைதனை உணர்ந்து நின்ற தருணத்தில்
என் பாசமிகு அம்மாவிற்கு
மடல் ஒன்று வரைகின்றேன்.
உடலில்லா பேனாவால்
உணவு வந்ததாளின்
ஒரு பகுதி வெற்றிடத்தில் - என்
உறவிற்கு எழுதும் முதற் கடிதம்
அது தான்.
'பகையுடன் விளையாடும்
உன் பிள்ளை நான் அம்மா' - என்று
பத்துவரி எழுதி முடித்திருப்பேன்.
திடுமென வேட்டொலிகள்
கேட்டதிசை பார்க்குமுன்னே
என்னோடு களமாடும்
இன்னுயிர்த்தோழன்
மடிந்து விட்டான்.
மீண்டும் காவலரண் சண்டை
தொடர்கிறது.
சற்றுச் சில நாளில் மீண்டும்
எழுதுகிறேன்!
வார்த்தைகளில் வருவது தான்
வரிவடிவமாகிறது - என்
தோழனின் நினைவும் கூட....
-நா. கானகன
அனலின் தகிப்பு
கடுங்கோடை காலம்
உப்பு வெளிக்காற்று வந்து
மேனி உரசிச்செல்லும் நேரம்
கந்தை உடையுடன்
காவலரண் மேட்டினிலே
காலை, மாலையென கண்ணயர
நேரமின்றி - எம்
கடமைதனை உணர்ந்து நின்ற தருணத்தில்
என் பாசமிகு அம்மாவிற்கு
மடல் ஒன்று வரைகின்றேன்.
உடலில்லா பேனாவால்
உணவு வந்ததாளின்
ஒரு பகுதி வெற்றிடத்தில் - என்
உறவிற்கு எழுதும் முதற் கடிதம்
அது தான்.
'பகையுடன் விளையாடும்
உன் பிள்ளை நான் அம்மா' - என்று
பத்துவரி எழுதி முடித்திருப்பேன்.
திடுமென வேட்டொலிகள்
கேட்டதிசை பார்க்குமுன்னே
என்னோடு களமாடும்
இன்னுயிர்த்தோழன்
மடிந்து விட்டான்.
மீண்டும் காவலரண் சண்டை
தொடர்கிறது.
சற்றுச் சில நாளில் மீண்டும்
எழுதுகிறேன்!
வார்த்தைகளில் வருவது தான்
வரிவடிவமாகிறது - என்
தோழனின் நினைவும் கூட....
-நா. கானகன

