03-12-2005, 01:25 PM
மீளமைக்கப்பட்ட படையினரின் நிலைகள் மீது பொதுமக்கள் தாக்குதல்!
நேற்று சாவகச்சேரி நகர்ப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொதுமகன் ஒருவர் மீது சிறீலங்காப் படையினரின் கனரக வாகனம் மோதி படுகாயமடைந்திருந்தார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து பொதுமக்களுக்கும் படையினருக்கும் இடையில் முறுகல்நிலை வலுப்பெற்றது.
இதன்போது மக்கள் மீது படையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுத்தாக்குதல் குண்டாந்தடிப்பிரயோகம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.
இதனையடுத்து மக்கள் படையினரின் மீது கற்களை வீசித்தாக்குதலை நடத்தியதுடன் படையினரின் முகாம்களையும் எரித்தழித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று பெருமளவான படையினரையும் பொலிசாரையும் அப்பகுதியில் குவித்து அவர்களின் பாதுகாப்புடன் எரியூட்டப்பட்ட படைநிலைகளை புனரமைத்திருந்தனர்.
இந்நடவடிக்கை நேற்றிரவு படையினரால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இன்று அப்பகுதியில் மீளவும் திரண்டிருந்த பொதுமக்கள் புனரமைக்கப்பட்ட படையினரின் படைநிலைகளை மீளவும் அடித்து நொருக்கியதுடன்
சாவகச்சேரி நகருக்கான பிரதான வீதிகளில் மறியல் போட்டு படையினரையும் அவர்களின் வாகனங்களையும் அவ்வீதிகளினூடாகப் பயணிக்கத் தடைவிதித்தனர். இருப்பினும் ஏ-9 வீதியூடான மக்கள் போக்குவரத்து தொடர்ந்து இடம்பெறுகின்றது.
இந்நிலையில் அவ் வீதியில் பயணித்த அரச பேரூந்து ஒன்றும் தாக்குலுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளையில் சமரச நிலையை ஏற்படுத்தும் நோக்கில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் படைத்தரப்பிற்கும் இடையிலான சந்திப்பொன்று தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]