03-12-2005, 10:37 AM
thamizh.nila Wrote:அவவிட பெற்றோர் பேருக்கு தான் பயமுறுத்தியிருக்கிறார்கள்? ஆனால் அனைவரும் அப்படி இல்லையே?
நஞ்சு குடிப்பேன் என்று மிரட்டும் பெற்றோர் தமது பெயர், புகழ், பணம், சாதி, சமயம் போன்றவற்றிற்காக தமது பிள்ளைகளின் மகிழ்வான வாழ்வை பலி கொடுக்க துணிந்தவர்கள். அவர்கள் மிகவும் சுயநலவாதிகள். ஒருபோதும் தமது உயிரை இழக்கப்போவதில்லை.
தமது பெற்றோர் தமது நல்வாழ்வை நாசம் செய்ததால் நஞ்சு குடித்த இளம் பிள்ளைகளை பற்றி பெருமளவில் அறிந்திருக்கிறோம். ஆனால் மகள் தமக்கு பிடிக்காத ஒருவரை திருமணம் செய்ததால் நஞ்சு குடித்த பெற்றோரை நான் ஒரு முறை கூட கேள்விப்பட்டது இல்லை. நஞ்சு குடிப்பேன் என்று மிரட்டிய பெற்றோர், மகள் மீறினால் செய்வதெல்லாம் அடியாட்களை வைத்து தொல்லை கொடுப்பது, பொய் பெட்டிசன் எழுதி தொல்லை கொடுப்பது, அப்பா அம்மாவை "நீ தானடி பிள்ளைகளை கெடுத்தாய்" என்று அடிப்பது "இனிமேல் அவள் எங்கள் மகள் இல்லை" என்று ஊரெல்லாம் சொல்லித்திரிவது போன்றவை தான்.
thamizh.nila Wrote:ஆனால் அவவுக்கே 12 வருடம் எடுத்து இருக்கா? :mrgreen:
தமிழ் நிலா,
அவவுக்கு தனக்கு பிடித்தமானவரை கண்டுபிடிக்கவும் குடும்ப வாழ்க்கைக்கு நேரம் ஒதுக்கவும் தான் 12 வருடம் எடுத்ததே தவிர பெற்றோரின் அனுமதிக்காக அவ காத்திருக்கவில்லை.

