03-12-2005, 08:10 AM
[quote=thamizh.nila] படித்தென்ன பட்டம் பெற்று என்ன, இப்படி செய் இல்லை எனில் நாங்கள் மருந்து குடிப்போம் என்று கூறும் போது, ஒரு பெண்ணிற்கு தன் சுதந்திரமா? பெற்றவர்களின் உயிரா பெரிதாக படும்? சொல்லுங்கள்
இப்படியான நிலைமை ஒன்றை எனது சிநேகிதி ஒருவர் கையாண்ட விதத்தை பாருங்கள்.
அவர் அப்போது இலங்கையில், கண்டியில் ஒரு விஞ்ஞான நிறுவனத்தில் விஞ்ஞானியாக இருந்தார். அவரது ஆய்வு பூச்சி மருந்து குடித்தவர்களுக்கு எவ்வாறு மரணம் விளைகிறது என்பது பற்றியதாகும். பேராதெனிய மருத்துவ நிலையத்துக்கு பூச்சிமருந்து குடித்த ஒருவரை கொண்டுவந்த உடனேயே அவருக்கு தொலைபேசி அழைப்பு வரும். மருந்து குடித்தவர் மரணமடைய முதல் வண்டி பிடித்து போய் இரத்தம் எடுத்து வரவேண்டும். நிறையப்பேர் இப்படி பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்ய முயற்சிப்பதில்லை. அதனால் அவருக்கு போதுமான அளவு வேறு வேறு ஆட்களின் இரத்தம் கிடைப்பதில்லை.
கொழும்பில் அவரது பெற்றோர் வாழ்ந்து வந்தனர். வார இறுதியில் கொழும்புக்கு போனால் பெற்றோரோ "கலியாணம் செய்" என்று ஒரே தொல்லை. அவர்கள் காட்டும் எவரும் இவருக்கு பிடிக்கவில்லை. கடைசியாக ஒரு ஞாயிற்று கிழமை தந்தை அந்த ஆயுதத்தை எடுத்தார். அது தான் <b>பூச்சிமருந்து</b>
மகள் என்ன செய்தார் தெரியுமா?
"சரி இதை குடிக்கிறதெண்டால் குடியுங்கள். ஆனால் குடிச்சுப்போட்டு பேராதெனிய ஹொஸ்பிற்றலுக்கு கொண்டு வரச்சொல்லுங்கள். எனக்கு ஆட்கள் காணாமல் இருக்கிறது" என்று சொல்லிவிட்டு கண்டிக்கு வந்து விட்டார்.
இது நடந்தது 12 .வருடங்களுக்கு முதல். இன்று அவர் சர்வதேச அளவில் பிரபலமான நரம்பியல் விஞ்ஞானி. கடந்த வருடம் தனக்கு பிடித்தமானவரை பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்திருக்கிறர்.
ஆகவே "உன்னுடைய வாழ்க்கையை அழிக்க விடு. அல்லது நான் சnகிறேன்", என்று நிற்கும் படு மோசமான சுயநலவாத பெற்றோரை பெண்கள் மனதை கல்லாக்கிக் கொண்டு தாங்களாகவே "வாழ்ந்தது காணும் போய்ச்சேருங்கள்" என்று அனுப்பி வைக்க வேண்டும்.