03-12-2005, 03:50 AM
Quote:அதே நேரம் பெண்கள் தாங்களாகவே அதற்க்குள் அடை பட்டுக்கிடக்கின்றனர். நான் இப்படி செய்தால் எனது சமுகம் என்னை எப்படி பார்க்குமு; என்று ஓர் அச்சத்தில் இருக்கின்றனர்
அண்ணா, நீங்கள் சொல்வதை நான் மறுக்கவில்லை. ஆனால் அப்படி பெண்கள் தாங்களாகவே அடைபட்டு இருப்பதன் காரணத்தையும் கூறி உள்ளேன்.
அப்படி விடுதலை பெறும் பெண்களுக்கு கிடைக்கும் பெயர் என்ன? அப்பாவும் அம்மாவும் உயிரோட இருக்க வேண்டும் என்றால், இதை செய்யாதே, எத்தனை குடும்பங்களில் இது நடக்கின்றது.
Quote:.(ஒரு சிலர்) இந்த அச்சத்தை களைந்தவர்கள் தமிழ் காலாச்சாரத்தின் எல்லையை தாண்டி விட்டனர்.
அப்படி எல்லை தாண்டியவர்களும் ஒரு சிலரே. பெரும் பாலும் புலத்தில் தான் இப்படியான சம்பவங்கள் நிகழ்கின்றன. ஆனால் அதற்கு பெண்கள் மேலேயே குற்றம் சொல்ல முடியுமா அண்ணா? அவர்களில் செயல்களுக்கு பின்னால் காரணங்கள் ஒன்றும் இல்லை என சொல்ல உங்களால் முடியுமா?
Quote:எமது பெண்கள் சுகந்திரமாய் வாழ்கின்றனர் என்பதை ஏற்க மறுக்கின்றீர்கள். காரணம் என்ன?
எது அண்ணா சுதந்திரம்?? புலத்தை எடுத்து கொண்டால் பல விதமான சூழ்நிலையில் இருக்கும் குடும்பங்கள் உள்ளன.
1. உங்கு உள்ள ஒரு ஆண் மகன், அங்கு போய் ஒரு பெண்ணை திருமணம் செய்து அழைத்து வருகிறார். அவவும் வேலைக்கு போக வேண்டிய கட்டாயம் இன்று உள்ளது. வேலை போகும் பெண் எனில், வீட்டு வேலைகளிலும் ஆண்கள் பங்கு எடுக்க வேண்டும். சரியா? ஆனால் இது எத்தனை குடும்பங்களில் நடக்கின்றது அண்ணா? வேலைக்கு போய் வந்தால் இவருக்கு மட்டுமா அண்ணா களைப்பு?
இப்படியான ஒரு வாழ்க்கையில் அந்த பெண் கத்தாமல் என்ன தான் செய்வாள்? கத்துவதை நான் சரியெண சொல்வதில்லை. ஆனால் அவள் தன் நாட்டில் இருந்த போது, இவர் அங்க போய் தேவயில்லாமல் நிJஅத்தை சொல்லாஅமல், அங்க வா இது செய்கிறேன் அது இது என்றால் , அந்த பெண் தான் என்ன செய்வா??
நான் தமிழர்கள் வாழும் பல நாடுகளுக்கு கல்வி நிமித்தமாக சென்று இருக்கிறேன். இந்த காரணம் தான் புலத்தில் இருந்து கல்யாணமாகி வந்த பெண்களால் முன் வைக்க பட்டுள்ளது.
சரி இவையை விடுவம்.
2. புலத்தில் பல காலங்களாக வசிப்பவர்கள். அவர்களில் பலருக்கு பெரிதாக பிரச்சனை இல்லை. பெரும்பாலும் பெண்களும் உழைக்கிறார்கள். வீடு வாங்கினால் அரைவாசி பணம் அவர்களும் செலுத்துகிறார்கள். ஆகவே கிருபன் அண்ணா கூறியது போல் பெண்கள் தங்கள் காலில் நிற்கும் போது அடிமை தனம் என்பது நேரடியாக வீட்டில் இருந்து வர முடியாது. ஆனால் வேலை என்று போகும் போது, அல்லது சமூகம் என்று வரும் போது நடக்காமலா இருக்கிறது?
3.அடுத்து பெரும் பாலானவர்கள் யோசிக்காமல் குற்றம் சுமத்துவது இளைஞர்கள் மேல். பெரும்பாலும் பெண்கள் மேல்.
புலத்தில் ஆண் புகைப்பிடித்தால் அது "சரி ஆன் பிள்ளை தானே, இளம் வயசு" அல்லது "போக போக சரிஆகி விடும்". ஆண்களுக்கு என்று வரும் போது அது பொதுவாக ஒரு health issue. பெண்கள் என்று வரும் போது அது கலாச்சாரம், பண்பாடு, மதம்.. என்ன அண்ணா இது நியாயம்? புகை பிடிப்பதை நான் சரியென கூற வரவில்லை. ஆனால் பெண் புகை பிடிக்கும் போது வரும் கலாச்சாரம், பண்பாடு..ஆண் புகைக்கும் போது எங்கே போய் விடுகிறது. தராசு சமனா க இல்லையே அண்ணா..இதுவே ஒரு வகை அடிமைத்தனம் தானே..
விதண்டா வாதம் என நினைக்காமல் சிந்தியுங்கள். இப்படி தான் , இதை தான் நான் மறை முகமான அடிமை வாழ்வு என்றேன்.
படித்தென்ன பட்டம் பெற்று என்ன, இப்படி செய் இல்லை எனில் நாங்கள் மருந்து குடிப்போம் என்று கூறும் போது, ஒரு பெண்ணிற்கு தன் சுதந்திரமா? பெற்றவர்களின் உயிரா பெரிதாக படும்? சொல்லுங்கள்
கிருபன் அண்ணா, தங்கள் கருத்துக்களில் நிஜம் உள்ளது.
[size=16][b].

