03-12-2005, 01:07 AM
யாழ் குடாநாட்டில் இராணுவத்தினர்- பொதுமக்கள் மத்தியில் மீண்டும் முறுகல்
முன்னர் இடம்பெற்ற சம்பவம் ஒன்று
யாழ் குடாநாட்டில் சாவகச்சேரியில் இராணுவ ட்ரக் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 45 வயதுடைய சின்னத்தம்பி மனோகரன் என்பவர் படுகாயமடைந்து யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் நடைபெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வாகன விபத்து நடந்ததும், இராணுவ ட்ரக் வண்டியை ஓட்டிவந்த இராணுவ சிப்பாய் தப்பியோடிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்வதற்கு முன்னர், விபத்தில் சம்பந்தப்பட்ட ட்ரக் வண்டியை அங்கு வந்த இராணுவத்தினர் தமது முகாமுக்குக் கொண்டு செல்ல முயன்றதாகவும், அங்கு கூடிய பொதுமக்கள் அதனைத் தடுக்க முற்பட்டபோது, இராணுவத்தினர் வானத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும், இதனால் ஆத்திரமுற்ற பொதுமக்கள் இராணுவத்தினர் மீது கல்வீச்சு நடத்தி, வீதிகளில் டயர்களை எரித்து வாகனப் போக்குவரத்தைத் தடைசெய்ததுடன், அருகில் உள்ள இராணுவ காவலரண் ஒன்றையும் தாக்கியதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து அங்கு விரைந்த மேலதிக இராணுவத்தினரும், பொலிஸாரும் நிலைமையைக் கட்டுப்பாட்டினுள் கொண்டு வருவதற்காக கண்ணீர்ப்புகைப் பிரயோகம், தடியடியும் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவத்தினர் பொதுமக்கள் மீது நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதலில் பொதுமகன் ஒருவர் காயமடைந்ததாக பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
வாகன விபத்தில் சம்பந்தப்பட்ட இராணுவ சிப்பாயை உடனடியாகக் கைது செய்து அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வீதியில் திரண்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய போதிலும், விபத்தில் சம்பந்தப்பட்ட ட்ரக் வண்டியை இராணுவத்தினர் தமது முகாமுக்குக் கொண்டு சென்றுவிட்டதாகத் கூறப்படுகின்றது.
இந்தச் சம்பவத்தையடுத்து, சாவகச்சேரி ஊடான வாகனப்போக்குவரத்து சிலமணித்தியாலங்கள் தடைப்பட்டிருந்தது.
கடைகளும் இழுத்து மூடப்பட்டன.
வாகன விபத்து தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களுக்கு உறுதியளித்ததையடுத்து, இப்போது அங்கு அமைதி ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை வடமராட்சி துன்னாலை- கலிகை பகுதியில் இராணுவத்தினர் என சந்தேகிக்கப்படும் 5 பேர் தீய நோக்கத்துடன் நேற்று நள்ளிரவு வீடு ஒன்றினுள் புகுவதற்கு முயன்றதாகவும், அவர்களின் முயற்சி வெற்றயளிக்காத நிலையில் அவர்களில் ஒருவர் அருகில் உள்ள இராணுவ முகாமுக்குள் சென்றதாகவும் ஊர்மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, இன்று காலை 11 மணியளவில் கலிகைச் சந்தியில் கூடிய பொதுமக்கள் வீதியில் டயர்களை எரித்து போக்குவரத்தைத் தடைசெய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.
கலிகை சந்தியில் அமைந்துள்ள சிறிய இராணுவ முகாமிலிருந்து சுமார் 50 யார் தொலைவில் உள்ள வீட்டிற்குள்ளேயே சந்தேக நபர்கள் உட்புக முயன்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்த பொலிஸாரும், இராணுவ அதிகாரிகளும் சம்பந்தப்பட்டவர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து அங்கு நிலைமை அமைதியடைந்ததாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கிடையில் இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பிய 15 இலங்கைத் தமிழ் அகதிகள் நேற்று நள்ளிரவு தலைமன்னார் கடற்பரப்பில் மணற்திட்டு ஒன்றில் கைவிடப்பட்ட நிலையில் கடற்படையினரால் மீட்கப்பட்டு தம்மிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த 15 பேருடன், அகதியைப் போன்று வந்த ஒருவரிடம் சுமார் ஒன்றரை கிலோ நிறையுள்ள ஹெரோயின் போதைப் பொருள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த 16 பேரும் இன்று மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.
ஹெரோயின் கடத்தி வந்ததாக சந்தேகிக்கப்படுபவரை வரும் 14 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்ட மன்னார் மாவட்ட நீதிபதி, இடம்பெயர்ந்து சென்று தாயகம் திரும்பியவர்கள் 15 பேரையும் அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு சிவில் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
BBC Tamil News

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>