Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கிழக்கில் தாக்குதல்
#9
மட்டக்களப்பில் புளொட் அமைப்பின் அலுவலகம் மீது தாக்குதல்

மட்டக்களப்பு நகரிலுள்ள புளொட் அமைப்பின் மாவட்ட அலுவலகத்தின் மீது இன்று பிற்பகல் அடையாளந் தெரியாத ஆட்களினால் மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் மாவட்ட அமைப்பாளர் ரதன் எனப்படும் சுப்ரமணியம் பகீரதன் உட்பட அந்த அமைப்பைச் சேர்ந்த 3 பேர் காயமடைந்துள்ளார்கள்.

இவர்களில் கடும் காயங்களுக்கு உள்ளான காந்தன் எனப்படும் தம்பிராஜா பாலசுந்தரம் மற்றும் வெள்ளையன் எனப்படும் நாகமணி சிவராசா ஆகியோர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, இன்று மாலை ஹெலிகொப்டர் மூலம் கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

அலுவலகத்திற்கு ஏற்கனவே பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள போதிலும் பின் பக்க காணி வழியாகவே இந்த தாக்குதல் மேற் கொள்ளப்பட்டுள்ளதாகவும், அலுவலகத்திற்கு வெளியே உள்ள கொட்டகையொன்றில் உரையாடிக் கொண்டிருந்தவர்களே காயமடைந்ததாகவும், விசாரனைகளை மேற்கொண்டு வரும் மட்டக்களப்பு பொலிஸார் கூறுகின்றார்கள்.

இந்த சம்பவத்திற்கு விடுதலைப் புலிகள் மீதே புளொட் அமைப்பு தமது விசாரனையின் போது சந்தேகம் வெளியிட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றார்கள்.

இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு நகர அரசியல் துறைப் பொறுப்பாளர் அன்புமாறனுடன் தொடர்பு கொண்ட போது இதனை அவர் முற்றாக நிராகரித்தார்.


வெறிச்சோடிய நிலையில் வாழைச்சேனை
இதற்கிடையில் ஓட்டமாவடியைச் சேர்ந்த ஆட்டோ சாரதி எம்.எச்.அப்துல் ரஹீம் அடையாளந் தெரியாத ஆட்களினால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டிக்கும் வகையில் இன்று ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை முஸ்லிம் பிரதேச்ஙகளில் இரண்டாவது நாளாகவும் துக்க தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக இந்த பிரதேச வழமை நிலை தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த படுகொலையை கண்டித்து இன்று வாழைச்சேனையிலிருந்து ஓட்டமாவடி ஊடாக மாவடிச்சேனை வரை ஆர்ப்பாட்டப் பேரணியொன்று நடைபெற்றது.

கல்குடா முஸ்லிம் மக்கள் முன்னணி என்ற பேரில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது இடம் பெற்ற அசம்பாவிதங்களின் போது இதில் கலந்து கொண்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் அமைப்பாளர் ஏ.ரி.எம்.பரீத் ஒரு சாராரினால் தாக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தவிர செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் ஒருவரும், அவரது உதவியாளரும் மற்றுமொரு ஊடகவியலாளரின் மகனும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சிலரினால் தாக்கப்பட்டுள்ளார்கள்.

இன்று இந்த பிரதேசங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.

BBC Tamil News
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by வியாசன் - 03-06-2005, 01:14 PM
[No subject] - by வியாசன் - 03-06-2005, 02:15 PM
[No subject] - by Mathan - 03-07-2005, 02:17 AM
[No subject] - by Mathan - 03-07-2005, 11:23 PM
[No subject] - by thivakar - 03-08-2005, 12:07 PM
[No subject] - by Mathan - 03-08-2005, 12:18 PM
[No subject] - by Mathan - 03-12-2005, 01:04 AM
[No subject] - by Mathan - 03-27-2005, 10:03 PM
[No subject] - by Danklas - 04-12-2005, 02:07 PM
[No subject] - by Danklas - 04-12-2005, 02:09 PM
[No subject] - by tamilini - 04-12-2005, 02:16 PM
[No subject] - by Danklas - 04-12-2005, 02:23 PM
[No subject] - by kuruvikal - 04-12-2005, 02:30 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)