09-03-2003, 01:22 PM
பெண்கள் தாழ்ந்தவர்கள் என்பது யாரால் உணரப்படுகிறது.... உணர்ந்து இன்றும் ஒதுங்க முனையப்படுகிறது...எல்லாத்திற்கும் மூன்றாம் உலக நாடுகள் தான் உதாரணம் அல்ல...மேற்கில் பெண்கள் அரைகுறையாக வீதியில் வலம் வருவதல்ல பெண் சுதந்திரம்...பெண்கள் தங்கள் காலில் தங்கள் சுயசிந்தனையின் கீழ் செயற்பட்டு பொதுவான சமுதாய விழுமியங்கள் காத்து மனித சமூகத்தின் வளர்ச்சிக்கு ஆண்களுக்கு நிகரான பங்களிப்பு வழங்குதலே..... இன்று பெண்களிடம் பெண் சமூகவியல் சமத்துவத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது...இதை எத்தனை பெண்கள் செய்கிறார்கள்...அல்லது செய்ய முனைகிறார்கள்...எல்லோரும் எழுத்தளவில் எழுதுகிறார்கள் அல்லது ஆண்கள் போல் வேடம் போடுகிறார்களே தவிர உண்மையான மனித சமூகத்தேவையை உணர்ந்து செயற்படுபவர்களாகத் தெரியவில்லை...அதுதான் பெண்ணியம் பெண்விடுதலையின் இன்றைய நிலை....! அதற்கு ஆண்கள் எப்படிக் குற்றவாளிகள் ஆவது...பெண் தன்னிலை உணர வேண்டும் தன்பலம் பலவீனம் உணர்ந்து தன்னை மீளமைத்துக் கொள்ள வேண்டும் இதை நாம் சொல்லவில்லை அன்றே பாரதியே சொல்லிவிட்டான் ஆனால் அது உணரப்பட்ட விதம் மிகத்தவறாதாகவே தெரிகிறது..அது இன்று ஆண் எதிர்ப்புவாதமாகவே வளர்க்கப்பட்டுவருகிறது...அதுவே தவறு...அது மனித சமூகத்திற்கு உதவப்போவதும் இல்லை...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

