03-11-2005, 05:39 PM
Quote:அப்ப நிலவன் அண்ணா, ஆணகளின் மேலைத்தேய நாட்டத்தையும் நீங்கல் வெறுக்கிறீர்கள் தானே??
நிச்சயாமாக ஆணே பெண்னே தமிழ் கலைகலை மிதிப்பதை வெறுக்கிறேன். இதில் நீங்கள் பெண்கள் பற்றி கதைத்ததால் பெண்களைப் பற்றி மட்டும் சொன்னேன் . எனக்கு ஆண் பெண் வித்தியாசம் பார்க்கக தெரியாது யாராக இருந்தாலும் எனக்கு தெரிந்ததை தெரிந்த படி எழுதுவேன்
Quote:இந்திய பெண்களை வெளியே தெரியும் படி அடிமை படுத்துகிறார்கள். ஈழ பெண்களையும், புலத்தில் வாழும் ஈழ பெண்களையும் தெரியாமல் அடிமைப்படுத்துகிறார்கள் என்பதே என் கருத்து. கலாச்சாரம், பண்பாடு என்ற போர்வையில் எத்தனை அடிமை தனங்கள்? இல்லை என்று உங்களால் கூற முடியுமா??மன்னிக்கனும் தமிழ்.நிலா
கடவுள் நம்பிக்கை என்பது வேறு. மூட நம்பிக்கை என்பது வேறு. அது போல தான். ஆண்களும் பெண்களும் எமது பண்பாடை பாதுகாக்க வெண்டும். ஆனால் சில விடயங்கல் பெண்களை அடிமை படுத்த உருவாக்க பட்டன. அவற்றை களை பிடுங்க வேண்டும்.
என்னோட ஒருத்தரும் சண்டை போடாதிங்கோ. நான் நல்ல பிள்ளை. தெரியாததை உங்களிடம் கேட்கிறேண்.
இது சண்டையல்ல கருத்து மோதல்... தமிழ் பண்பாடு எவரையும் அடிமைப்ப டுத்த வில்லை. அதே நேரம் பெண்கள் தாங்களாகவே அதற்க்குள் அடை பட்டுக்கிடக்கின்றனர். நான் இப்படி செய்தால் எனது சமுகம் என்னை எப்படி பார்க்குமு; என்று ஓர் அச்சத்தில் இருக்கின்றனர்.(ஒரு சிலர்) இந்த அச்சத்தை களைந்தவர்கள் தமிழ் காலாச்சாரத்தின் எல்லையை தாண்டி விட்டனர். வெறும் ஆடையலங்காரங்களில் தமிழ் கலாச்சாரம் இருப்பதாய் சொல்லம் முட்டாள் நானல்ல. எங்கள் கலாச்சாரம் ஆங்கிலேயரால் மதிக்கப்படுகின்றது ஆனால் எம்மவர்களால் மிதிக்கப்படுகின்றது. இப்போது புகலிடத்தில் இருப்பது தமிழ் கலாச்சாரம் இல்லை. "தமிழ்ப்பல்காலாச்சாரம்" இப்படியாய் காலாச்சாரம் இருக்கையில்...
இந்தியப் பெண்கள் அடிமைப்படுத்தப்படுவதை ஏற்க்கும் நீங்கள் எமது பெண்கள் சுகந்திரமாய் வாழ்கின்றனர் என்பதை ஏற்க மறுக்கின்றீர்கள். காரணம் என்ன? உங்கள் நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் நீங்கள் சுகந்திரமாய் இல்லையா? காலாச்சாரம் உங்களை கட்டுப்படுத்துகிறதா? அப்படியாயின் அது எந்நத விகையில்உங்களை கட்டுப்படுத்து கின்றது என்பதை சொல்லுங்கள்....
நிலவன்
<span style='font-size:25pt;line-height:100%'>\" \"</span>

