03-11-2005, 03:41 PM
படையினர் வாகனம் மோதி பொதுமகன் நிலை கவலைக்கிடம்@ மக்கள் எதிர்ப்பு போராட்டம்
யாழ். சாவகச்சேரிப் பகுதியில் சிறீலங்காப்படையினரின் வாகனம் மோதி பொதுமகன் ஒருவர் படுகாயம் அடைந்ததைத் தொடர்ந்து மக்களுக்கும் படையினருக்கும் இடையில் கடும் முறுகல்நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஏ-9 பிரதான வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது படையினரின் கனரக வாகனம் மோதியுள்ளது.
இதனால் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொதுமகன் படுகாயம் அடைந்தார். பின்னர் அவர் யாழ். போதனா மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.
இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த மக்கள் படையினருக்கு எதிராக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவ்வேளை படையினர் மக்கள் மீது கண்மூடித்தனமாக கண்ணீர்ப்புகைக் குண்டுத்தாக்குதல்கள் குண்டாந்தடித் தாக்குதல்கள் என்பவற்றை மேற்கொண்டனர்.
படையினரின் இச்செயற்பாட்டைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த மக்கள் படையினரின் முகாம்கள் மீது கற்களாலும் தடிகளாலும் எறிந்து தாக்குதல் நடத்தியதுடன் படையினரின் மூன்று காவலரண்களையும் எரித்து அழித்துள்ளனர்.
இவ்வேளையில் படையினர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டனர். தற்போது அப்பகுதியில் பதட்ட நிலை தோன்றியுள்ளது.
இதனால் அவ்வீதியூடான போக்குவரத்துக்கள் உள்ளிட்ட சகல இயல்பு நிலைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை காயமடைந்த நபரின் நிலை மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
.
சுட்டபழம்
நன்றி புதினம்

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]