Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈழத்தில் மக்கள் தொடர் போராட்டம் ஆரம்பமா?
#1
வடமராட்சியிலும் நேற்று சிங்கள இராணுவக் காடையன் வெறித்தனம்!

வடமராட்சி துன்னாலை கலிகைச்; சந்தியில் சிறீலங்காப் படைமுகாமைச்; சேர்ந்த படைச் சிப்பாய் ஒருவர் நேற்று நள்ளிரவு முகாமுக்கு அருகாமையிலுள்ள வீடொன்றில் புகுந்துள்ளார்.

பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கும் நோக்கில் அவ்வீட்டிற்குள் படையினர் நுழைந்துள்ளார்.

இதனையடுத்து அவ்வீட்டின் குடும்பத்தலைவர் சத்தமிட்டு அயலவர்களின் உதவியுடன் படையினனை பிடிக்க முற்பட்டபோது சிப்பாய் தப்பியோடியுள்ளார்.

இதனையடுத்து துன்னாலை மக்கள் சிறீலங்காப் படையினருக்கெதிராக இன்று காலை 6 மணியிலிருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

படையினரின் முகாம் ஒன்றை ஆத்திரமடைந்த மக்கள் தீயிட்டு எரித்துள்ளதுடன் படைமுகாம் முன்பாக ரயர்களைப் போட்டு எரிய10ட்டி படையினரை வெளியேறுமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டம் தற்போதும் தொடர்ந்த வண்ணம் உள்ளதால் அங்கு பதற்ற நிலை காணப்படுவதாக அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மக்கள் படையினரை நோக்கி கற்களால் வீசி தாக்கி வருவதாகவும்ää பெருமளவான மக்கள் திரண்டு படையினருக்கெதிரான தமது எதிர்ப்பைக் காட்டி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது அங்கு பெருமளவான ஆயுதம் தாங்கிய சிறீலங்காப் படையினரும்இ சிறீலங்கா காவல்துறையினரும கலகம் அடக்கும் கவல்துறையினரும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


சுட்டபழம்
நன்றி புதினம்
....................................................................................................................

ஏ 9 வீதியில் இராணுவ வாகனம் ஒரு உந்துருளியில் மோதியதனால் மக்கள் வீதி மறியலில் ஈடுபட்டுள்ளதாக உலகத்தமிழர் இணையவானொலியில் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply


Messages In This Thread
ஈழத்தில் மக்கள் தொடர் போராட்டம் ஆரம்பமா? - by வியாசன் - 03-11-2005, 02:00 PM
[No subject] - by tamilini - 03-11-2005, 02:02 PM
[No subject] - by வியாசன் - 03-11-2005, 03:41 PM
[No subject] - by Mathan - 03-12-2005, 01:07 AM
[No subject] - by hari - 03-12-2005, 04:28 PM
[No subject] - by kirubans - 03-12-2005, 04:47 PM
[No subject] - by KULAKADDAN - 03-12-2005, 04:51 PM
[No subject] - by hari - 03-12-2005, 06:40 PM
[No subject] - by hari - 03-12-2005, 06:46 PM
[No subject] - by Malalai - 03-12-2005, 07:14 PM
[No subject] - by வியாசன் - 03-12-2005, 08:44 PM
[No subject] - by sinnappu - 03-12-2005, 11:56 PM
[No subject] - by thivakar - 03-13-2005, 10:49 AM
[No subject] - by MEERA - 03-13-2005, 01:29 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)