03-11-2005, 12:52 PM
தமிழுக்கும், தூய தமிழுக்கும் அதிக வித்தியாசம் உண்டு என்பது எனது அபிப்பிராயம். முதலில் தற்போது பாவனையிலுள்ள தமிழை வளர்க்க முயலவேண்டும்.
80களின் பிற்பாடு தோன்றிய தொடர்பாடல் ஊடகங்களின் மூலம், ஆங்கிலம், மற்றும் பிற மொழிகள் தமிழரது பேச்சு மொழியில் அதிகம் கலக்க ஆரம்பித்துள்ளது. எனினும் எழுத்து மொழியில் பிறமொழித் தாக்கம் அதிகம் இல்லையென்றே சொல்லலாம் (அதாவது, ஏற்கனவே கலந்த வடமொழி, போர்த்துக்கீச, டச்சு சொற்களைத் தவிர புதிதாக பிற சொற்கள் பெரிதாகக கலக்கவில்லை).
எழுத்துத் தமிழ் உலகளாவிய ரீதியில் பொதுவாக இருக்க வேண்டும், ஒரு சிறு வட்டத்துக்குள் மாத்திரம் பாவனையில் இருக்கக் கூடாது. உதாரணமாக சுவிஸிலும், ஜேர்மனியிலும், அவுஸ்ரியாவிலும் ஜேர்மன் எழுத்து மொழி பொதுவானது, அல்லாவிடில் நாளாந்த வங்கிக் கருமங்களைக் கூட ஒழுங்காகச் செய்ய முடியாது. இதே நேரத்தில், இந்நாடுகளில் உள்ள ஜேர்மன் பேச்சுமொழி இடத்துக்கிடம் வேறுபடுகின்றது.
இது போலவே தமிழிலும் பேச்சுத்தமிழ், எழுத்துத்தமிழ் என்று உண்டு.
பேச்சுத்தமிழ் இடத்துக்கிடம் வேறுபாடு உடையது. வடமராட்சியில் பாவனையிலுள்ள சில சொற்கள் தென்மராட்சியிலுள்ளவர்களுக்குப் புரியாது. அதுபோலவே மட்டக்களப்புத் தமிழ், மலையகத் தமிழ், யாழ்ப்பாணத் தமிழ் பேச்சு வழக்கில் வேறுபாடு உடையன.
எனவே பேச்சுத் தமிழை மாற்றுவோம் என்ற கூற்றுடன் என்னால் உடன்பட முடியாது. இயலுமானால் பிற மொழிச் சொற்களின் கலப்பைக் குறைக்க முயலலாம். நான் ஊரில் இருந்த சமயம் ஆங்கிலச் சொற்களின் கலப்பில்லாமல்தான் பேசினேன். எனினும் தற்போது ஒரு வசனம் பேசும்போதே பல ஆங்கிலச் சொற்கள் புகுந்துவிடுகின்றன. இதையிட்டு நான் பெருமை கொள்வதில்லை, மாறாக வெட்கப்படுகின்றேன். இப்படி எனது பேச்சு மாறியதிற்கான காரணம், ஒரு நாளின் பெரும்பகுதி ஆங்கிலத்தில் உரையாடுவதிலும் எழுதுவதிலும் கழிவதுதான் (மூளை தமிழில் சிந்தித்தாலும்!).
தமிழ்ச் சொற்களின் பிரயோகத்தினை அதிகப்படுத்துவதற்கு தமிழை வாசிக்கவும் எழுதவும் வேண்டும். தனியே பேசினால் மட்டும் நிறைவேறாது. ஆங்கிலம் கற்கும்போது கற்றபாடம் இதுதான். அதிக வாசிப்பும், எழுத்தும் ஒருவரை ஒரு மொழியில் பாண்டித்தியம் அடையச் செய்கின்றது.
எழுத்துத் தமிழை நாம் முடிந்தவரை தமிழிலும், இயலுமானால் தூய தமிழிலும் எழுத முயலவேண்டும்.
பலருக்கு யாழ் களம் போன்ற இணையத் தளங்களில் மட்டுமே எழுத சந்தர்ப்பம் கிடைக்கின்றது. இங்கு எழுதும்போது, முறையான இலக்கண சுத்தத்துடனும், எழுத்துப் பிழைகளின்றியும் எழுதமுற்பட்டால் தமிழை வளர்க்கமுடியும்.
கடைசியாக ஊரில் நடந்த உண்மைச் சம்பவம்.
எமது ஊரிலுள்ள தமிழ்ப் பண்டிதர் கோயிலுக்கு அர்ச்சனை செய்யவதற்காகப் பொருட்கள் வாங்கக் கடைக்குச் சென்று கடையில்லுள்ளவரைப் பார்த்துப் பின்வருமாறு கேட்டார்.
"ஒரு சீப்பு வாழைப்பழமும், மூன்று வெற்றிலை பாக்கும் தாருங்கள். மிகுதியைச் சிறுசிறு சில்லரையாகத் தாருங்கள்".
கடைக்காரனும் அங்கு நின்றவர்களும், பண்டிதர் போனபின்னர் விழுந்துவிழுந்து சிரித்தனர்.

<b> . .</b>