03-10-2005, 07:47 PM
Mathuran Wrote:தூய தமிழில் பேசவேண்டும் என எண்ணுபவனுக்கு, நாற்காலி என சொல்வதில் கடினம் இருக்காது. நமக்கு புரியாத ஒன்றை புரிகின்றபோது அதனை உள்வாங்குவதே பண்பு. தமிழை வளர்க்கவேண்டும் தூயதமிழில்த்தான் பேசிடல் வேண்டும் என்றால் அது யாராலும் முடியும். நான் தமிழிழை பள்ளியில் பைன்று தேர்ச்சி பெற்றவன் அல்ல. எனது சொந்தமுயற்சியால் பொத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தினை கொண்டதனால், ஏதோ என்னால் முடிந்தவரையில் தூய தமிழினை பேசுகின்றேன்.
மனம் உண்டானால் இடம் உண்டு.
தூங்குவதை போல நடிப்பவனை, துயில் எழுப்ப முடியாது.
மதுரன், தூயதமிழில் பேசவேண்டும் என்ற ஆர்வத்தினால் தாங்கள் தூயதமிழில் பேச முயற்சிக்கிறீர்கள். தங்களை போலவே பலரும் முயற்சிக்கிறார்கள். இவர்கள் இன்று நேற்றல்ல, பல தலைமுறைகளாக முயற்சித்து வருகிறார்கள். ஆனால் அவர்களது முயற்சிகளை ஒரு புறம் ஒதுக்கிவிட்டு ஆங்கிலமும் சமஸ்கிருதமும் வேறு மொழிகளும் தமிழில் பெருமளவு கலந்திருக்கின்றன. இன்னமும் கலந்து வருகின்றன. நீஙகளும் மற்றும் சிலரும் தூய தமிழில் பேசுவதனால் தமிழ் மாற்றமடைவதோ வேற்று மொழிகளில் இருந்து சொற்களை உள்வாங்குவதோ மறைந்து விடப்போவதில்லை. வாழும், வளரும் தமிழ் சிறப்பான வளர்ச்சி பெற அதன் வளர்ச்சி திட்டமிட்ட முறையில் அமைய வேண்டும்.
தமிழ் பரந்த அளவில் பயன்படுத்தப்பட்டால் தான் அதன் பயன்பாடு கருதி அது வளர்ச்சி பெறும். தமிழில் பொழுதுபோக்கு இலக்கியங்கள் பெருமளவு வருகின்றன. ஆனால் வாழ்க்கையில் பயன்பாட்டு மொழியாக தமிழ்நாட்டில் ஆங்கிலம் இருப்பதால் பொழுதுபோக்கு இலக்கியங்களில் பெருமளவு ஆங்கிலம் கலக்கிறது. தமிழீழத்தில் நிலைமை அப்படியல்ல.
சிறிலங்காவில் <b>"சிங்களம் மட்டும்"</b> சட்டம் 24 மணித்தியாலத்தில் நிறைவேற்றப்பட்டவுடன், பண்டாரநாயக்க பாடசாலைகளில் அள்று வரை போதனை மொழியாக இருந்த ஆங்கிலத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து சிங்களத்திலும் தமிழிலும் மட்டுமே பாடசாலைக்கல்வி அமையவேண்டும் என ஆணையிட்டார். இதன் விளைவாக பாடசாலையுடன் கல்வியை முடித்துக் கொண்டவர்களுக்கு அங்கு ஆங்கில புலமை மிகவும் குறைவு. ஆகவே தமது அறிவை பெருக்கிக்கொள்ள அவர்கள் தமிழில் தங்கியிருக்கிறார்கள். தமிழ் சிறப்புடன் வளர தமிழீழ பிரதேசம் சிறந்த விளைநிலமாக இருக்கிறது. ஐ.நா. சபையின் தமிழ் வெளியீட்டுக்கு பொறுப்பாக இருந்த தமிழ் ஆர்வலர் மணவை முஸ்தபா அவர்கள் புதிய தொழில்நுட்ப சொற்களுக்கு பல அகராதிகளை தயாரித்துள்ளார். அறிவியல் வெளியீடுகளை பெருமளவில் தமிழில் உருவாக்கி தமிழீழத்தில் வெளிவர செய்வது, தமிழ் சிறப்பாக வளர உதவும் ஒரு நல்ல செயற்திட்டமாக அமையும். அங்கே தமிழ் தேவை காரணமாக வளரும். மற்ற நாடுகளில் தமிழில் ஆர்வமுள்ள சிலரே தமிழை பேசியும் எழுதியும் வருவர்.
<b>ஆகவே அறிவியல் வெளியீடுகளை பெருமளவில் தமிழில் வெளிவர செய்ய யாழ் களத்தினர் திட்டமிட்டு செயற்பட வேண்டும்.</b>
ஒவ்வொரு அறிவியல் துறைக்கும் ஒருவர் பொறுப்பெடுத்து மாதம் ஒரு ஆக்கமாவது தயாரித்து வழங்க வேண்டும். தமிழீழத்தில் அது அச்சில் வெளிவரவும், சேகரித்து வைக்கப்படவும், மக்கள் மத்தியல் விற்கப்படவும் ஏற்பாடுகள் செய்யப்படவும் வேண்டும். இதன் மூலம் தமிழ் சிறந்து வாழ நாம் நல்ல பங்களிப்பை செய்ய முடியும்.

