03-09-2005, 10:13 PM
நுளம்பும் எயிட்ஸும்
----------------------
நுளம்புகள் இரத்தம் குடித்து உயிர்வாழ்வதால் அவை எயிட்ஸை பரப்பக்கூடும் என்று தப்பான அபிப்பிராயம் உள்ளது. கீழ்வரும் விளக்கம் இந்தத் தப்பபிப்பிராயத்தை போக்க உதவும்.
நுளம்புகள் கடிக்கும்போது, அவை கடிபடுபவருக்குக் குருதியைச் செலுத்துவதில்லை. மாறாக குருதியை உறிஞ்சுகின்றன.
எனவே நுளம்பின் குருதியோ, அது முன்பு கடித்தவர்களின் குருதியோ புதிதாகக் கடிபடுபவரிடம் செல்லாது.
எனினும் நுளம்புகள் தமது உமிழ்நீரை ஒருவரைக் கடிக்கும்போது உட்செலுத்துகின்றன. இந்த உமிழ்நீரினால்தான் மஞ்சள் காய்ச்சல், மற்றும் மலேரியாவை உண்டுபண்ணும் கிருமிகள் (பக்ரீரியாக்கள்) தொற்றுகின்றன.
ஆனால் எயிட்ஸ் கிருமிகள் நுளம்பின் உமிழ்நீரில் பெருக வாய்ப்பில்லாததாலும், அவை அதிக நேரம் உமிழ்நீரில் உயிர் வாழமுடியாததாலும் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு நுளம்புகள் மூலம் பரவ வாய்ப்பில்லை.
மேலும் நுளம்புலள் ஒருவரிடமிருந்து இரதம் உறிஞ்சிய பின்னர் உடனடியாக இன்னுமொருவரைக் கடிக்கமாட்டா. பொதுவாக அவை உறிஞ்சிய இரத்தம் சமிபாடு அடையும்வரை வேறுவரைக் கடிப்பதில்லை.

<b> . .</b>