03-09-2005, 08:36 PM
மல்லிகைப்பூ சினேகா!
அன்றைய ஷட்டிங் முடிந்து விட்டது. விட்டது.
‘‘சரி, அப்போ நான் கிளம்பறேன். நாளைக்கும் இதே ஸீனோட தொடர்ச்சிதானே... வழக்கம்போல நானே மல்லிகைப் பூ வாங்கித் தலையில வெச்சிட்டு வந்துடறேன்!’’ என்றார் சினேகா.
சினேகாவின் போக்கு புரொடக்ஷன் மேனேஜருக்குப் புரியவில்லை. அதென்ன, மல்லிகைப் பூ மீது மட்டும் சினேகாவுக்கு அவ்வளவு அக்கறை... ஆர்வம்!
அடுத்த நாள், சினேகா வீட்டுக்குப் போய்விட்டார் புரொடக்ஷன் மேனேஜர்.
கொஞ்ச நேரத்தில் ஒரு சின்னப் பெண் பூக்கூடையோடு வந்தாள். அவளிடம் நூறு ரூபாயைக் கொடுத்துவிட்டு, பூவை வாங்கித் தலையில் வைத்துக்கொண்டு, சினேகா சொன்னார்...
‘‘அந்தப் பொண்ணு பத்தாவது படிக்கிறா சார்! ஸ்கூல் பீஸ் கட்டணும்னு ஒருநாள் வந்தா. பணம் கொடுத்தேன். ஆனா, ‘உழைக்காமல் காசு வாங்கறது தப்பு. தினமும் என்கிட்டே பூ வாங்கிக்கோங்க’னு சொன்னா. எனக்கும் தொடர்ந்து உங்க ஷ¨ட்டிங்கில் தினமும் பூ வெச்சுக்கிட்டு வர்ற மாதிரி கேரக்டர்தானே... அதான், நீங்க வாங்கற பூவை நானே வாங்கி, இந்தப் பொண்ணுக்கு உதவறதா முடிவு செய்தேன்!’’
புரொடக்ஷன் மேனேஜர் பார்வையில் விஸ்வரூபம் எடுத்து நின்றார் சினேகா
எம்.எஸ்.தீபன்

<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>