03-09-2005, 05:30 PM
kuruvikal Wrote:வளர்ந்த பின்னும் தம் பாலர் வயது நட்பை முறையாக வெளிப்படுத்துவதில் மேலை நாட்டு வெள்ளையின உறவுகள் பெரும்பாலும் சிறப்பாகவே நடந்து கொள்கின்றனர்...! கண்டால் கட்டித்தழுவி தங்க நட்பை ஞாபகங்களைப் பகிர்ந்து கொள்வர்...! ஆனா நம்மாக்கள்....இருக்கினமே..அதிலும் பெண்கள்...தொட்டாலே கற்பொடிஞ்சது போல....பரிகாசம் பண்ணுறதும்..நடிக்கிறதும்...அதுவே அவர்களின் மனது சுத்தமில்லை என்பதைக் காட்டுகின்ற போது...நட்பென்ன வேண்டிக்கிடக்கு...நம்மாக்களோட....என்றுதான் தோன்றும்...தோன்றுகிறது...! நம்மாக்கள் திருந்த நிறைய இருக்கு...என்ன திருந்திறாப் போல இல்ல...! :wink:
உண்மை அன்பை வெளிப்படுத்துவதில் நம்மவர்க்கு சரியான தயக்கம். தமக்காக வாழ்வதை விட மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற பயத்தில் வாழ்பவர்களே அதிகம். மனதின் உள்ளே அன்பிருந்தாலும் அது தேவையான இடங்களில் சரியான முறையில் வெளிக்காட்டப் படாவிட்டால் பயனற்று போகின்றது. :!:
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>


