09-02-2003, 12:40 AM
Manithaasan Wrote:மதி..நன்றி மணிதாசன்.. பலபத்திரிகை செய்திகளை படிப்பதனால் தமிழில் எழுதும்போது எதிரும் புதிருமான செய்திகளை தரவேண்டிவரும்.. அதனால் பல பிரச்சனைகள் வரக்கூடும். ஓரளவுக்கு நடுநிலையான உண்மைச் செய்திகள் மாத்திரம் தெரிவுசெய்து லிங்க் கொடுக்கிறேன்.. மறுபக்கத்துக் கருத்தையும் எழுத விடுவார்களானால்.. எழுதலாம். ஈராக் பிரச்சனைக்கே துர்ற்றியவர்கள்.. சிங்கள பத்திரிகைகளில்வரும் செய்திகளை ஒரு பொழுதும் ஏற்கமாட்டார்கள்.. அதற்கான மனப்பக்குவம் இங்கு இல்லை. ஆதலால் என்னாலான ஒரு தணிக்கை முறையை கடைப்பிடிக்கிறேன் அவ்வளவுதான்..
ஈராக் சண்டையை மட்டும்தான் மொழிபெயர்ப்பியளோ?
இதையும் தமிழில் தந்து மூலத்தின் இணைப்பையும் போடலாம்தானே..
ஏனிந்த ஓரவஞ்சனை???
தமிழ்ப் பத்திரிகைகள் இராணுவத்தை மூண்றாம் தரப்பை குற்றம்கூறுவதுபோல சிங்கள் பத்திரிகைகள் குற்றச்சாட்டுகளை விடுதலைப்புலிகளுக்கெதிராக முன்வைப்பதும்.. அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதில்தான் தமிழ் பத்திகைகளில் வருகின்றன உரைகளில் வருகின்றன.. மேடைகளில் முழக்கமிருகின்றன நமது வானொலிகளில் எதிரெலிக்கின்றன என்றால் நம்புவீர்களா.. பக்கசார்பற்று இருபக்கத்து செய்திகளையும் படித்துப்பாருங்கள் பலதும் புரியும்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

