03-09-2005, 04:08 AM
பாலா - சொல்ஹெய்ம் நாளை லண்டனில் சந்திப்பு
நோர்வேயின் விசேட சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்தை நாளை லண்டனில் சந்தித்து பேசுகிறார் என்று கொழும்பில் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விடுதலைப்புலிகளின் வான்படை விவகாரம் குறித்து அண்மையில் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நோர்வே பிரதமர் பொன்டேவிக்கிற்கு கடிதம் எழுதியிருந்தார். புலிகளின் இந்த விசேட படையணி குறித்த தமது உத்தியோகபூர்வ அதிருப்தியையும் ஜனாதிபிதி தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதியின் அறிவிப்பின் பிரகாரம் அவர் குறிப்பிட்ட விடயம் சம்பந்தமாக ஆராயும் பொருட்டே நோர்வே அரசு தனது விசேட தூதுவரை புலிகளின் ஆலோசகரை சந்திக்க அனுப்பியுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இச்சந்திப்பின் நோக்கம் குறித்த உண்மையான தகவல்கள் தெரியவரவில்லை.
இதேவேளைää விடுதலைப்புலிகளின் வான்படை விவகாரம் குறித்து அமெரிக்காவின் இராஜாங்கச் செயலர் கொண்டலிஸா றைஸிடம் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் எடுத்துக்கூறியிருப்பதாகவும் கொழும்புச்செய்திகள் தெரிவிக்கின்றன.
புலிகள் வான்படை அமைத்திருப்பதுää வான் கலங்களை கொள்முதல் செய்திருப்பதுää வன்னியி;ல் விமான ஓடுபாதை அமைத்திருப்பது ஆகிய விடயங்கள் சிறீலங்காவின் பாதுகாப்புக்கு மட்டுமன்றி சர்வதேச பாதுகாப்புக்கும் பேரச்சுறுத்தலாகும் என்று அமைச்சர் கதிர்காமர் அமெரிக்காவிடம் முறையிட்டிருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.
புதினம்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>