Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சின்னப்பிள்ளைகளுக்கு மட்டும்
#1
சின்னப்பிள்ளைகளுக்கு மட்டும் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :wink:

<b><span style='font-size:25pt;line-height:100%'>ஏமாந்த வேதாளம்!</b></span>

<img src='http://img190.exs.cx/img190/5411/vethalam2ur.jpg' border='0' alt='user posted image'>

ஒரு விவசாயி தன் நிலத்தில் நெல் பயிரிட்டிருந்தான். அவனது கடுமையான உழைப்பின் காரணமாக நெல் பயிர் நன்றாகச் செழித்து வளர்ந்திருந்தது. கதிர் முற்றி நெல் மணிகள் மஞ்சள் நிறத்தில் மின்னின. இந்தச் சாகுபடி நன்றாக விளைந்திருப்பதால் குடும்பம் கஷ்டப்படாமல் இருக்கும் என்று எண்ணினான் விவசாயி.

கதிர் அறுக்க நல்ல நாள் பார்த்து கதிர் அரிவாள், சாக்கு மூட்டை எல்லாம் எடுத்துக்கொண்டு அறுவடைக்குத் தன் வயற்காட்டிற்குச் சென்றான் விவசாயி.

ஒருமுறை வயலின் முன் விழுந்து கும்பிட்டு எழுந்த விவசாயி பயிர் செழித்து முற்றி வளர காரணமான சூரியனையும் வணங்கினான். பிறகு தலையில் துண்டைக் கட்டி, இடுப்பு வேட்டியை தார்பாய்ச்சிக்கட்டி வலது கையில் கதிர் அறுக்கம் அரிவாளுடன் வயற்காட்டில் அறுவடையை ஆரம்பிக்க இறங்கினான்.

அப்போது.

``நில், பயிரை தொடாதே! என்று ஒரு அதட்டும் குரல் கேட்டது.

விவசாயி நிமிர்ந்து சுற்றுமுற்றும் பார்த்தான். எவருமே தென்படவில்லை.

``என் வயலில் அறுவடை செய்ய என்னை தடை செய்வது யார்? என்று கேட்டான் விவசாயி.

``நான்தான் தடை செய்கிறேன். என் பெயர் வேதாளம். இந்த வயலை இப்போது நான் ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறேன்! என்றது வேதாளம்.

``என் வயல் இது. நான் பாடுபட்டு பயிர் வளர்த்திருக்கிறேன். இது எனக்கு உரியது. என் வயலில் ஆக்ரமிப்பு செய்யவோ, என்னை அறுவடை செய்யாதே என்று தடுக்கவோ சொல்ல எவருக்கும் உரிமை கிடையாது! என்று சொன்ன விவசாயி அறுவடை செய்ய இடது கையால் ஒரு கொத்துக் கதிரை பிடித்தான்.

``என் சாபத்துக்கு ஆளாகாதே! என்று கத்தியது வேதாளம்.

``என்ன சாபம் கொடுப்பாய்? என்று கேட்டான் விவசாயி.

``அறுவடை செய்து நீ கட்டும் ஒவ்வொரு கட்டிலில் இருந்தும் உனக்கு ஆழாக்கு நெல் மட்டுமே கிடைக்க சாபமிடுகிறேன்! என்றது வேதாளம்.

அதைக்கண்டு திகைத்துப் போய்விட்டான் விவசாயி. அறுவடை செய்தால் நாப்பது ஐம்பது கட்டுதான் தேறும். ஒவ்வொரு கட்டிலிருந்து இந்த வேதாளம் சாபமிட்டபடி ஒரு ஆழாக்கு நெல் மட்டுமே கிடைக்கும் என்றால் மொத்தம் பத்துப்படி நெல் கூடத் தேறாதே என நினைத்தான் விவசாயி.

``என்ன யோசனை செய்கிறாய்? என் சாபத்தின் விளைவைப் பற்றி யோசிக்கிறாயா? என்று கேட்டது வேதாளம்.

``ஆமாம்! என்று மெல்ல முனகினான் விவசாயி.

``இப்பொழுது என்ன செய்யப் போகிறாய்? ஆளுக்குப் பாதி எடுத்துக் கொள்வோமா? என்று கேட்டது வேதாளம்.

``என்ன சாபம் கொடுத்தாய்? என்று கேட்டான் விவசாயி.

``ஒவ்வொரு கட்டுக்கும் ஒவ்வொரு ஆழாக்கு நெல்மட்டுமே கிடைக்கும்! என்றது வேதாளம்.

`சரி என்று சொல்லிவிட்டு விவசாயி நெற்கதிர்களை அறுக்கத் தொடங்கினான்.

வேதாளம் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுது நான்கு கதிர்களை அறுவடை செய்து முடித்துவிட்ட விவசாயி அதை ஒரு கட்டு கட்டினான். இப்படி நான்கு நான்கு கதிர்களாக அறுப்பதும் அதை ஒரு கட்டாக கட்டி வைப்பதுமாக இருந்தான் அவன்.

வேதாளம் அவனைப் பார்த்து ``ஏன் இப்படி செய்கிறாய்? என்று கேட்டது.

``சிறியதாக கட்டினாலும் பெரிதாக கட்டினாலும் கட்டு கட்டுதானே. பெரிய கட்டை சின்னச்சின்ன கட்டாக கட்டினாலும் உன் சாபப்படி ஒரு கட்டுக்கு ஆழாக்கு நெல் கிடைக்குமே!... என்றான் விவசாயி.

இவனிடம் நம் பாச்சா பலிக்காது என்று வயல் காட்டிலிருந்து கிளம்பி ஓட்டம் பிடித்தது அந்த ஏமாந்துபோன வேதாளம்.
Reply


Messages In This Thread
சின்னப்பிள்ளைகளுக்கு மட்டும் - by vasisutha - 03-08-2005, 11:39 PM
[No subject] - by வியாசன் - 03-08-2005, 11:42 PM
[No subject] - by kavithan - 03-08-2005, 11:43 PM
[No subject] - by வியாசன் - 03-08-2005, 11:44 PM
[No subject] - by Malalai - 03-08-2005, 11:57 PM
[No subject] - by kavithan - 03-09-2005, 12:01 AM
[No subject] - by shanmuhi - 03-09-2005, 12:03 AM
[No subject] - by Malalai - 03-09-2005, 12:03 AM
[No subject] - by kavithan - 03-09-2005, 12:08 AM
[No subject] - by KULAKADDAN - 03-09-2005, 12:17 AM
[No subject] - by anpagam - 03-09-2005, 02:39 AM
[No subject] - by kavithan - 03-09-2005, 02:41 AM
[No subject] - by eelapirean - 03-09-2005, 04:48 AM
[No subject] - by thamizh.nila - 03-09-2005, 05:38 AM
[No subject] - by Malalai - 03-09-2005, 07:04 AM
[No subject] - by Malalai - 03-09-2005, 07:05 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)