03-08-2005, 05:53 PM
த்ரிஷா காட்டில் பேய் மழை!
<img src='http://thatstamil.indiainfo.com/images26/cinema/trisha_420.jpg' border='0' alt='user posted image'>
தமிழில் இப்போது முன்னணி ஹீரோயின் யார் என்றால் அது நிச்சயம் த்ரிஷா தான். அதே நேரத்தில் அவரது கைவசம் ஒரு படம் கூட இல்லை.
என்ன ரொம்ப குழப்பமா இருக்கா?. மேலே படிங்க... த்ரிஷா நடித்த படங்கள் எல்லாம பிச்சுக்கிட்டு ஓடுவதால், ராசி முத்திரையை 'பச்சக்' என்று குத்திவிட்டது கோடம்பாக்கம். இதனாõல் அவருக்கு அட்வான்ஸ் தரவும் கால்ஷீட் வாங்கவும் தினமும் ஒரு தயாரிப்பாளராவது போன் போட்டு விடுகிறார்.
ஆனால், இப்போது அம்மணி தெலுங்குப் பக்கமே தனது பார்வையை முழு அளவில் திருப்பியிருக்கிறார். இதனால் முழுக்க ஹைதராபாத் பக்கமே சூட்டிங்கில் இருக்கிறார். தமிழ்நாட்டுக்கு வந்தே பல வாரங்களாகிவிட்டன.
திருப்பாச்சி மற்றும் ஜி படங்களுக்குப் பிறகு இப்போது தமிழில் எதிலும் அவர் நடிக்கவில்லை.
தெலுங்கிலும் மார்க்கெட் சும்மா புல் பார்மில் இருப்பதாலும், சம்பளமும் குண்டக்க மண்டக்க தரப்படுவதாலும் அங்கேயே கவனம் செலுத்தி வருகிறார். தமிழோடு தெலுங்கிலும் இவர் தான் நம்பர் ஒன் ஹீரோயின். தமிழை விட தெலுங்கில் ஏராளமான ரசிகர்கள். இதனால் இவர் கேட்பதைவிடவும் கூடவே சம்பளம் கொடுக்கிறார்கள் ஆந்திராவாலாக்கள்.
அங்கு லேட்டஸ்டாக ஒரு படத்துக்கு த்ரிஷா வாங்கியிருக்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?. ரூ. 80 லட்சமாம். அம்மாடியோவ்... விரைவில் அவர் ரூ. 1 கோடியை எட்டினாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள்.
தமிழில் இதில் பாதி தான் கிடைக்கிறது. இப்போ புரியுதா தமிழில் மார்க்கெட் இருந்தும் தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தும் த்ரிஷா ஏன் ஊரப் பக்கமே திரும்ப மறுக்கிறார் என்று.
சம்பாதிக்கும் காசை அப்படியே அசெட்களை வாங்கிப் போட்டு நடிகைகளுக்கே ஒரு முன் மாதிரியாக விளங்குகிறார் த்ரிஷா. ஹைதராபாத்தில் ஒரு மாபெரும் பங்களாவை வாங்கிப் போட்ட கையோடு, போயஸ் கார்டனில் ஒரு வீட்டை வாங்கினார். இப்போது சென்னை சென்டாப் சாலையில் ஒரு பெரும் பங்களாவை வளைத்துப் போட்டுள்ளார்.
இவை எல்லாம் சில பல கோடிகளை மதிப்பாகக் கொண்டவை.
தெலுங்கில் நடித்தாலும் தமிழை விடவே மாட்டேன் என்கிறார் த்ரிஷா. தமிழில் தான் நல்ல கதைகள், நல்ல டெக்னீசியன்கள் எல்லாம் இருக்கிறார்கள். என் தாய் வீடு அது தான். தெலுங்கில் சில படங்களை முடித்துவிட்டு தமிழுக்கு வருவேன். தெலுங்கில் பெரிய அளவில் பணம் கிடைப்பது உண்மை தான், ஆனால், எல்லாமே கிளாமர் ரோல்ஸ் என்று மனம் கசக்கிறார்.
சமீபத்தில் காதல் படம் பார்த்துவிட்டு அசந்து போனாராம் த்ரிஷா. உடனே சந்தியாவுக்கு போனைப் போட்டு, ரொம்ப நல்லா நடிச்சுருக்கே என்று பாராட்டவும் செய்திருகிறார்.
பி.எல்.தேனப்பன் தயாரிக்க தான் நடிக்கவுள்ள மலை படத்தில் ஹீரோயினாக த்ரிஷாவையே புக் செய்யச் சொல்லிவிட்டாராம் சிம்பு.
இந்த இருவரும் நடித்த அலை படம் ஊத்திக் கொண்டாலும் மலை படத்தை வெற்றியாக்கிக் காட்டுகிறேன் என்கிறாராம் சிம்பு.
அலை படத்தின்போது சிம்புவால் 'டார்ச்சருக்கு' உள்ளானாதாகக் கூறப்பட்ட த்ரிஷா, கால்ஷீட் தருவாரா என்று பலரும் சந்தேகப்பட, மன்மதனுக்குப் பின் சிம்புவுக்கு தனி மரியாதை வந்துவிட்டதால், கால்ஷீட் கொடுப்பதாக சொல்லிவிட்டாராம் த்ரிஷா.
Thats Tamil

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>