03-08-2005, 02:54 PM
எயிட்ஸ் வைரசான எச் ஐ வி ஆனது நுளம்பின் மூலம் தொற்ற வேண்டுமாயின் அது நுளம்பின் உமிழ் நீரில் குறித்த ஒரு தொகையில் இருக்க வேண்டும்...! எச் ஐ வி ஆனது மனித உடல் சூழலுக்கு ஒத்த சூழலிலேயே அதிக காலம் வாழும் அதற்கு வெளியே அதன் தொற்றுக்குரிய இயல்புடனான வாழ்வுக்காலம் சில நிமிடங்களே...!
நுளம்பு மனிதக் குருதியை நுண்ணிய ஊசி போன்ற வாயுறுப்பால் அகத்துறிஞ்சி தனது வயிறு அல்லது கண்டப்பைக்குள் செலுத்தும் அங்கு அது சில நொதியங்கள் சேர்க்கப்பட்டு நுளம்புக்கான உணவாக கண்டப்பையுள் சேகரிக்கப்படும்...அந்தச் சூழலில் எச் ஐ வி அதிக காலம் உயிர் வாழாது...!
அதுவேளை மனித உடலில் இருந்து நுளம்பு குருதியை அகத்துறிஞ்சும் போது தனது உமிழ் நீரை மனித உடலுக்குள் பாய்ச்சும்...களத்துள் செல்லும் அல்லது கண்டப்பைக்குள் உள்ள மனிதக் குருதிக்கும் அதன் உமிழ்நீர் சுரப்பிக்கும் இடையில் நேரடித் தொடர்பில்லை...எனவே அங்கு எச் ஐ வி பரிமாற்றம் நிகழச் சந்தர்ப்பம் இல்லை....!
நுளம்பு மூலம் எச் ஐ வி பரவ வேண்டின் அது நுளம்பின் உமிழ் நீரில் வாழ்ந்தாக வேண்டும்...அதற்கான சாத்தியம் மிகக் குறைவு....! அதுபோக குறித்த அளவுக்கு உள்ளே எச் ஐ வி குருமிகள் எமது உடலுக்குள் நுழைந்தால் எமது உடலில் உள்ள பாதுகாவலர்கள் அவற்றை முற்றாக அழித்துவிடுவார்கள்...அவர்களின் தொழிற்பாட்டுக்கு மிஞ்சிய எச் ஐ வி தொற்று இருந்தால் மட்டுமே எச் ஐ வி மனித உடலில் பெருகும்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>