03-08-2005, 12:26 PM
கேக் செய்யும் முறை.
தேவயான பொருட்கள்.
கோதுமை மா 250 கிராம்
பட்டர் 250 கிராம்
சீனி 250 கிராம்
முட்டை 5
வனிலா சிறிதளவு (2 தேக்கரண்டி)
அப்பச் சோடா சிறிதளவு (2 தேக்கரண்டி)
முந்திரிகை வற்றல் விரும்பினால்
முதலில் முட்டையை உடைத்து வெள்ளைக்கருவையும் மஞ்சள் கருவையும் தனித் தனியாக பிரிக்கவும்
பின்னர் வெள்ளைக்கருவை தனியாக முதலில் நன்றாக அடிக்கவும். வெள்ளைக்கரு நன்றாக அடிக்கும்போது கட்டி போன்று வரும்.
பின்னர் மஞசள் கருவைத் தனியாக அடிக்கவும். அடுத்து பட்டரையும் (தேவைப்படின் இலேசாக உருக்கி) சீனியையும் ஒன்றாக அடிக்கவும். இதனுள் அடித்து வைத்த வெள்ளைக்கருவைச் சேர்த்து அடிக்கவும். பின்னர் அடித்து வைத்த மஞ்சள் கருவைச் சேர்த்து அடிக்கவும். இவைகள் நன்றாகக் கலந்த பின்னர் இதனுள் அப்பச் சோடாவையும் வனிலாவையும் சேர்த்துஅடித்து ஒரு பாத்திரத்தில் எடுக்கவும். இதன் பின்னர் கோதுமை மாவை சிறிது சிறிதாக ஒரு அகப்பையினால் கலந்து கேக் தட்டில் ஊற்றி அவுணில் 150 பாகை வெப்பனிலையில் 45 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும். முந்திரிகை வற்றலை மா கலந்தவுடன் அதனுள் கலக்கவும்.
glad