03-08-2005, 12:07 PM
<b> அக்கரைப்பற்றுப் பகுதியில் பதற்றம் பயணிகள் மீது திடீர் தாக்குதல்</b>
வெலிக்கந்தையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்றில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த மூன்று விவசாயத் தொழிலாளர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து நேற்று திங்கட்கிழமை காலை அப்பகுதியில் பதற்றமான நிலைமை காணப்பட்டது.
தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த மூன்று பேரின் ஜனாஸா நல்லடக்கம் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றது.
இதனையடுத்து நேற்று அதிகாலை 5 மணி தொடக்கம் பாலமுனை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று பிரதேசங்களிலுள்ள சில இடங்களில் திடீரென வீதிகளில் ரயர்கள் போட்டு எரிக்கப்பட்டு வீதித்தடைகள் ஏற்படுத்தப்பட்டன.
அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலைக்கு சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று மறிக்கப்பட்டு அதிலிருந்த பயணிகள் இறக்கப்பட்டு தாக்கப்பட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அக்கரைப்பற்று பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
எனினும், நேற்று நண்பகல் வரை அக்கரைப்பற்று , கல்முனை பஸ் சேவைகள் இடம்பெறவில்லை. வீதிகள் சோபையிழந்து ஒரு பதற்றமான சூழ்நிலையே காணப்பட்டது.
விசேட அதிரடிப்படையினரும், பொலிஸாரும் தீவிர ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததையும் காணக்கூடியதாகவிருந்தது.
தினக்குரல்

...............