Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அகதிகள் மீது நடுக்கடலில் கொடுமை....!!!
#1
<b> தமிழகத்தில் இருந்து திரும்பிய அகதிகள் மீது நடுக்கடலில் கொடுமை </b>

ஆயுதபாணிகள் ஆண்களைக் கட்டிவைத்து பெண்கள் மீது பாலியல் இம்சை

தமிழ் நாட்டிலிருந்து படகில் தாயகம் திரும்பிய 50 இலங்கைத் தமிழ் அகதிகள் தலைமன்னார் கடற்பரப்பிலுள்ள மணல் திட்டொன்றில் இறக்கி விடப்பட்டதால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் அவர்களிடமிருந்த பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு பெண் அகதிகள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட கொடுமையும் சனிக்கிழமை இரவு இடம்பெற்றிருக்கிறது.

அகதிகள் மணல் திட்டில் நிராதரவாக இறக்கிவிடப்பட்டு ஏங்கிக் கொண்டிருந்த வேளையில் படகொன்றில் துப்பாக்கி, வாள் போன்ற ஆயுதங்களுடன் வந்திறங்கிய மூவரே கொச்சைத் தமிழில் பேசியபடி நகை, பணம் உட்பட பெறுமதியான பொருட்களை அபகரித்ததுடன் பெண்களைத் தனிமைப்படுத்தி பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாகவும் பாதிக்கப்பட்டோர் நேற்று திங்கட்கிழமை மன்னார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது;

இராமேஸ்வரத்திலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணியளவில் 50 அகதிகளும் தலா மூவாயிரம் இந்திய ரூபா வீதம் செலுத்தி இந்திய மீன்பிடிப் படகொன்றில் புறப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரையும் சனிக்கிழமை காலை 7 மணியளவில் இந்திய கடற்பரப்பிலுள்ள மணற்திட்டியொன்றில் பலவந்தமாக இறக்கிவிட்டு இந்திய படகோட்டிகள் சென்றுள்ளனர்.

இதனையடுத்து, நண்பகல் 11.30 மணியளவில் அப்பகுதிக்கு வந்த தனுஷ்கோடி மீனவர்கள் மீன்பிடிப்படகொன்று 4,500 இந்திய ரூபாவைப் பெற்று இலங்கைக்கு அண்மையிலுள்ள இன்னொரு மணற்திட்டியில் இவர்களை இறக்கிவிட்டுச் சென்றுள்ளது.

பசி, தண்ணீர்த் தாகம் என்பவற்றால் மணற்திட்டியில் பெண்கள், சிறுவர்கள் மயக்கமடைந்து தவித்துக் கொண்டிருந்த வேளையில் அப்பகுதிக்கு வந்த இன்னொரு இந்திய மீன்பிடி ரோலர் படகொன்று இவர்களிடம் 10 பவுண் தங்க நகை, 20 ஆயிரம் இந்திய ரூபா என்பவற்றைப் பெற்று தலைமன்னார் அருகேயுள்ள மணற்திட்டியொன்றில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளது.

சனிக்கிழமமை இரவு 9 மணியளவில் அவ்விடத்தில் கொண்டுவரப்பட்டு இறக்கப்பட்ட அகதிகள் தாகத்தாலும் களைப்பாலும் மயக்கமுற்றிருந்த வேளையில் திடீரென அங்கு படகொன்றில் துப்பாக்கி மற்றும் வாள்களுடன் வந்திறங்கிய மூவர் அங்கிருந்தோரை விசாரித்துள்ளனர்.

இதனையடுத்து, 50 அகதிகளில் 23 ஆண்களையும் துப்பாக்கி முனையில் தனியாக அழைத்துச் சென்று அவர்களின் ஆடைகளைக் களைந்து அவற்றால் கைகளையும் கால்களையும் கட்டித் தாக்கிய பின்னர் அவர்களிடமிருந்த பணத்தை அபகரித்துள்ளனர்.

இதனையடுத்து, மணற்திட்டியின் வேறொரு பகுதிக்கு பெண்களையும் சிறுவர்களையும் துப்பாக்கி முனையில் மிரட்டி அழைத்துச் சென்று பெண்களின் ஆடைகளைக் களைந்தெறிந்து சுமார் இரு மணிநேரம் பாலியல் இம்சையில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன், அழுது கூக்குரலிட வேண்டாமென்று தமது கைகளிலிருந்த பெரிய ரோச்லைட்டுகளால் பெண்கள் மீது கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

இவர்களில் 5 பெண்கள் மிக மோசமான பாலியல் இம்சைக்குள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் அறியவருகிறது.

சுமார் இரு மணிநேரத்திற்கும் மேலாக இந்த வெறியாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெண்களிடமிருந்த சுமார் 30 பவுண் தங்க நகைகள், பெறுமதியான பல பொருட்கள் என்பவற்றையும் அபகரித்து விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

சனிக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்ற போதிலும், ஞாயிற்றுக்கிழமை மாலை வரை பசி, தாகத்தால் மயக்கமடைந்து மிகவும் பரிதாபகரமான நிலையில் கைவிடப்பட்டிருந்த இவர்களின் நிலையை அறிந்து உள்ளூர் மீனவர்கள் தலைமன்னார் பங்குக் குருவிற்கு வழங்கிய தகவலையடுத்தே பின்னர் மீட்கப்பட்டுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை மாலை தலைமன்னார் பங்குக்குருவின் ஏற்பாட்டில் 3 படகுகளில் சென்ற உள்ளூர் மீனவர்கள் கடற்படையினரின் உதவியுடன் இவர்கள் அனைவரையும் மீட்டுள்ளனர்.

தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட இவர்கள் தமக்கு நேர்ந்த இந்த அவலங்கள் தொடர்பாக பொலிஸாரிடம் தெரிவிக்காமல் நேற்று திங்கட்கிழமை மன்னார் நீதிபதியிடமே தெரிவித்துள்ளனர்.

மன்னார் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லா முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை ஆஜர் செய்யப்பட்ட அகதிகள் தமக்கு நேர்ந்த அவலங்கள் தொடர்பாக முறையிட்டதையடுத்து, இவர்கள் அனைவரிடமும் தனித்தனியாக வாக்குமூலங்களைப் பெற்று எதிர்வரும் 18 ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிப்பதுடன் குறிப்பிட்ட சந்தேகநபர்களைக் கைது செய்யுமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து, விசேட பொலிஸ் குழுவொன்று நேற்று நண்பகல் அகதிகள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியான வாக்குமூலங்களைப் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அகதிகளின் சார்பில் சட்டத்தரணிகள் ஏ.ஜே.ஜோன்தாசன், மாஷா ஜபருல்லா, ஜெபநேசன் லோகு ஆகியோர் ஆஜராகினர்.

மன்னார், திருகோணமலை, யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய இடங்களைச் சேர்ந்த இந்த அகதிகள் அனைவரும் 1990 களில் இடம்பெயர்ந்து இந்தியாவுக்குச் சென்று அங்குள்ள ஈரோடு, சேலம், திண்டுக்கல் அகதிமுகாம்களில் வசித்தவர்கள் என்றும் தெரியவருகிறது.

தினக்குரல்
...............
Reply


Messages In This Thread
அகதிகள் மீது நடுக்கடலில் கொடுமை....!!! - by thivakar - 03-08-2005, 11:59 AM
[No subject] - by glad - 03-08-2005, 12:51 PM
[No subject] - by shanmuhi - 03-08-2005, 03:05 PM
[No subject] - by tamilini - 03-08-2005, 03:23 PM
[No subject] - by hari - 03-08-2005, 06:42 PM
[No subject] - by hari - 03-09-2005, 03:10 PM
[No subject] - by Niththila - 03-09-2005, 03:15 PM
[No subject] - by sinnappu - 03-11-2005, 08:33 AM
[No subject] - by MEERA - 03-12-2005, 12:06 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)