03-07-2005, 11:27 PM
யாழ்ப்பாணத்தில் கண்டன பேரணி
யாழ்ப்பாணத்தில், கடந்த வெள்ளிக்கிழமை இராணுவ வாகனம் ஒன்றினால் பாடசாலை மாணவி ஒருவர் மோதுண்டு உயிரிழந்தமை, அதனைக் கண்டித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள், வீதி மறியலின்போது பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டமை, இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தின்போது வயோதிபர் ஒருவர் கொல்லப்பட்டமை என்பனவற்றைக் கண்டித்து, இன்று, யாழ்ப்பாணத்தில் கண்டனப் பேரணி ஒன்று நடைபெற்றது.
யாழ் பல்கலைக்கழக மாணவர் பேரவை, யாழ் தொழில்நுட்ப கல்லூரி மாணவர் சங்கம், யாழ் மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியம் ஆகிய மாணவர் அமைப்புக்கள் இதனை ஏற்பாடு செய்திருந்தன.
காலை 11.30 மணியளவில் நல்லூர் கந்தசாமி கோவிலின் பின்வீதியில் இருந்து ஆரம்பமாகிய இந்தப் பேரணி, சர்வதேச போர்நிறுத்த கண்காணிப்பு குழுவின் யாழ் மாவட்ட அலுவலகத்தில் சென்று முடிவடைந்தது.
பேரணியில் சென்றவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பியதுடன், கண்டன வாசகங்கள் அடங்கிய அட்டைகளையும் ஏந்தியிருந்தனர்.
பேரணியின் முடிவில் போர்நிறுத்த சர்வதேச கண்காணிப்பு குழுவின் தலைவருக்கு எழுதப்பட்ட மகஜர் ஒன்றும் மாணவர்களினால் கையளிக்கப்பட்டது.
மகஜரைப் பெற்றுக்கொண்ட போர்நிறுத்த கண்காணிப்பு குழுவின் யாழ் மாவட்ட பிரதிநிதி, இந்த சம்பவங்கள் தொடர்பாக தாங்கள் விசாரணைகள் நடத்தி வருவதாகவும், மாணவர்களின் மகஜர் தமது தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இன்றைய கண்டனப் பேரணியையொட்டி, வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அசம்பாவிதங்களில் உயிரிழந்தவர்களுக்காக, யாழ் நகரில், துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ் நகரக் கடைகள், வாகனங்கள், வீதிகள் என்பனவற்றில் கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டிருந்தன.
கொழும்பிலிருந்து விசேடமாக யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டுள்ள கலகம் அடக்கும் பொலிசாருடன், யாழ் நகரப் பொலிசாரும், இராணுவத்தினரும் முக்கிய இடங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
எனினும் அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும், யாழ் நகரின் இயல்பு நிலைமை பாதிக்கப்படவில்லை என்றும் பொலிசார் தெரிவித்தனர்.
BBC தமிழ் செய்தி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>