03-07-2005, 11:23 PM
மட்டக்களப்பில் மேலும் ஒருவர் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் தாசன் எனப்படும் சதாச்சரலிங்கம் கமலதாஸ், நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு அடையாளந்தெரியாத ஆட்களினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் ஜூலை மாதம் 26ம் திகதியும் இவர் அடையாளந்தெரியாத நபர்களினால் சுடப்பட்டு காயமடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று காலை தனது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுச் சென்ற இவர் பின்னர் வீடு திரும்பவில்லை என்றும், கழுத்திலும் தலையிலும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இவரது சடலம் வீதியில் கிடந்ததாகவும் இவரின் உறவினர்கள் தெரிவிக்கின்றார்கள்.
ஏற்கனவே டெலோ அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட இவர், சில காலம் அப்பிரதேசத்தில் வரதன் குழுவாக இயங்கியவர் என்றும், ஈ.பி.டி.பி.யின் ஆதரவு பத்திரிகை என கருதப்படும் தினமுரசு வாரப் பத்திரிகைக்கு குறிப்பிட்ட காலம் இடையிடையே செய்திகளை வழங்கி வந்தவர் என்றும் அப்பிரதேச மக்களின் தகவல்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.
இவரது மோட்டார் சைக்கிளும், கையடக்க தொலைபேசியும் கொலையாளிகளினால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுபோல் தெரிகின்றது என விசாரணைகளை மேற்கொண்டு வரும் காத்தான்குடி பொலிசார் கூறுகின்றனர்.
கொலையாளிகள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
BBC தமிழ் செய்தி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>