Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காணி, பொலீஸ் அதிகாரம் வேண்டும்
#2
'வடக்கு, கிழக்கை முழுமையாக நிருவகிக்கக் கூடிய அதிகாரங்களை விதந்துரைக்கும் யோசனைகள்"

பாரிஸில் தயாரித்த வரைபு குறித்து தமிழ்ச்செல்வன்

சுவிஸ் புறப்படுமுன்னர் பிரெஞ்சு விமான நிலையத்தில் இருந்து தினக்குரலுக்கு பிரத்தியேக செவ்வி

'வடக்கு- கிழக்கை முழுமையாக நிர்வகிக்கக் கூடிய அனைத்து அதிகாரங்களையும் கொண்ட நிர்வாகக் கட்டமைப்பையே நாம் கோருகின்றோம். தற்போது நாம் தயாரித் துள்ள இந்த வரைவு வடக்கு- கிழக்கை முழு அளவில் நிர்வகிக்கக் கூடிய அதிகாரங்களை விதந்துரைக்கும் யோசனைகளைக் கொண்டிருப்பதாக" விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் நேற்றுச் சனிக்கிழமை பாரிஸி லிருந்து தினக்குரலுக்கு வழங்கிய பிரத்தியேகப் பேட்டிýயில் தெரிவித்தார்.

சுவிற்சர்லாந்துக்குச் செல்வதற்காக நேற்றுக் காலை 8 மணியளவில் பாரிஸின் சாந்து போல் விமான நிலையம் வந்திருந்த போதே அங்கிருந்து அவர் தினக்குரலுடன் சிறிது நேரம் உரையாடிýய போது இதனைத் தெரிவித்தார்.

இடைக்கால நிர்வாக சபை தொடர்பாக இலங்கை அரசு சமர்ப்பித்த 'தற்காலிக நிர்வாகக்கட்டமைப்பு" யோசனை மற்றும் அது தொடர்பாக பாரிஸில் விடுதலைப் புலிகள் சட்டவல்லுநர்கள் மற்றும் அறிஞர்களுடன் இணைந்து தயாரித்த மாற்று யோசனைகள் குறித்து தமிழ்ச்செல்வன் மேலும் கூறுகையில் வடக்கு -கிழக்கில் இடைக்கால நிர்வாகமென்பது நடைமுறைச் சாத்தியமான நிர்வாகக் கட்டமைப்பை கொண்டதாயிருக்க வேண்டும்.

இதன்படி வடக்கு- கிழக்கை முழுமையாக நிர்வகிக்கக் கூடிய அனைத்து அதிகாரங்களையும் இந்த இடைக்கால நிர்வாகசபை கொண்டிýருக்க வேண்டும். அரசு முன்வைத்த யோசனையில் பல குறைபாடுகள் உள்ளன. இவற்றையெல்லாம் ஆராய்ந்தே சட்டவல்லுநர்கள் மற்றும் அறிஞர்களுடன் புதியதும் புதுமையானதுமான இடைக்காலக் கட்டமைப்பு யோசனையொன்றை தயாரித்துள்ளோம்.

வடக்கு- கிழக்கை முழுமையாக நிர்வகிக்க முடியாத அதிகாரத்தினால் எதுவித பயனுமில்லை. அனைத்து அதிகாரங்களுமிருந்தால் தான் இடைக்கால நிர்வாக சபையை இயக்க முடிýயும்.

இலங்கை அரசுக்கும், சர்வதேச சமூýகத்திற்கும் இது நன்கு தெரியும். உலகில் எங்கெங்கெல்லாம் உள்நாட்டுப் போர் நடைபெற்று சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதோ அங்அங்கெல்லாம் நிரந்தரத் தீர்வுகள் எட்டப்படுவதற்கு முன்பாக அமைக்கப்பட்ட இடைக்கால நிர்வாகசபைகள் முழுமையான அதிகாரங்களைக் கொண்டதாகவே இருந்தன.

இது வரலாற்று ரீதியான உண்மை என்பதுடன் இம் முறை நாம் சந்தித்த வெளிநாட்டு இராஜதந்திரிகளும் இவ்வாறான வரலாறுகளைத் தெரிவித்துமுள்ளனர்.

இதனால் இலங்கை அரசும் எமது மாற்று யோசனைகளுக்கும் பெரும் எதிர்ப்புகளைத் தெரிவிக்காதென்றே கருதுகிறோம்.

இதுபோன்றே பாரிஸில் நாம் சந்தித்து கலந்துரையாடிýய இராஜதந்திரிகளும் எமது கருத்துகளுக்கும் யோசனைகளுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இடைக்கால நிர்வாகசபை தொடர்பாக சிறந்ததொரு யோசனையை தயாரித்துள்ளோம். இந்த யோசனைகளில் பல்வேறு அம்சங்களும் அடங்கியுள்ளன. இதனை இலங்கை அரசிடம் கையளிக்கும் போது தான் இந்த யோசனைகள் பற்றிய விபரங்கள் வெளியிடப்படும்.

அதற்கு முன்னர் நாம் அடுத்த வாரமளவில் வன்னி திரும்பியதும் இந்த யோசனைகள் குறித்து தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடனும், தலைமைப்பீடத்துடனும் ஆராய்ந்த பின்னர் சுமார் மூýன்று வாரங்களின் பின் அதாவது செப்டெம்பர் கடைசியில் எமது யோசனை நோர்வே அனுசரணையாளர்கள் ஊடாக அரசிடம் கையளிக்கப்படும்.

இதன் பின்னரே அடுத்தகட்ட நகர்வுகள் மேற்கொள்ளப்படும்

தற்போது கூட நாம் சுவிஸ{க்குப் புறப்பட்டுள்ளோம். அங்கு அரச உயர்மட்டத் தலைவர்களையும் இராஜதந்திரிகளையும் சந்தித்து இவை பற்றியெல்லாம் கலந்துரை யாடுவதுடன் அங்குள்ள எமது மக்களையும் சந்திக்கவுள்ளோம் எனவும் தெரிவித்தார்.

கிழக்கு நிலைமை

கிழக்கில் தோன்றியுள்ள நிலைமைகள் பற்றி தமிழ்ச்செல்வன் கூýறுகையில் வடக்கு கிழக்குப் பகுதி தமிழ் பேசும் மக்களின் தாயகமென்பதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை. இதனை காலம் காலமாகத் தெரிவித்து வருகிறோம்.

தற்போதைய தீர்வு முயற்சியில் முஸ்லிம்களின் பிரச்சினைகளும் தீர்க்கப்படுமென நாம் பலதடவைகள் தெளிவுபடுத்தியுள்ளோம். ஆனாலும், எமது போராட்டம் காலத்திற்குக் காலம் பெரும் வளர்ச்சி பெற்றபோது அதனை எதிர்கொள்ள முடிýயாத இனவாதிகள் தமிழ்-முஸ்லிம்களின் உறவை சீர்குலைக்கும், முயற்சிகளைத் திட்டமிட்டு மேற் கொண்டனர்.

தற்போதும் நல்லதொரு சூýழ்நிலை தோன்றியுள்ள நிலையில் தமிழ்- முஸ்லிம் உறவை சீர்குலைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு சில முஸ்லிம் அரசியல் தலைவர்களும் துணைபோகின்றனர் எனவும் தெரிவித்தார்.
நன்றி தினக்குரல்..
Truth 'll prevail
Reply


Messages In This Thread
[No subject] - by Mathivathanan - 08-31-2003, 05:51 PM
[No subject] - by Mathivathanan - 08-31-2003, 11:37 PM
[No subject] - by sOliyAn - 09-01-2003, 12:28 AM
[No subject] - by sethu - 09-03-2003, 06:49 PM
[No subject] - by Mathivathanan - 09-03-2003, 10:31 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)