Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அப்பாவின் படத்தை சேர்ந்து பார்த்த ஸ்டாலின், அழகிரி
#1
மார்ச் 06, 2005

அப்பாவின் படத்தை சேர்ந்து பார்த்த ஸ்டாலின், அழகிரி

மதுரை:

திமுக தலைவரும், தங்களது தந்தையுமான கருணாநிதியின் திரைக்கதை, வசனத்தில் தயாரான மண்ணின் மைந்தன் படத்தை மதுரையில் உள்ள ஒரு திரையரங்கில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலினும், அவரது அண்ணன் அழகிரியும் சேர்ந்து பார்த்தனர்.


திண்டுக்கல்லில் நடைபெறவுள்ள திமுக மண்டல மாநாடு தொடர்பான ஏற்பாடுகளைப் பார்வையிட ஸ்டாலின் திண்டுக்கல் வந்திருந்தார். பின்னர் அங்கிருந்து அவர் மதுரை வந்தார்.

மதுரை வந்த ஸ்டாலின், தனது அண்ணன் அழகிரியுடன் சேர்ந்து பைபாஸ் சாலையில் உள்ள குரு தியேட்டருக்கு சென்றார். அங்கு கருணாநிதியின் கதை வசனத்தில் உருவான மண்ணின் மைந்தன் படம் திரையிடப்பட்டிருந்தது.

இருவரும் சேர்ந்து அந்தப் படத்தைப் பார்த்தனர். அவர்களுடன் மதுரை மேயர் செ.ராமச்சந்திரன், முன்னாள் மேயர்கள் குழந்தைவேலு, பட்டுராஜன், எம்.எல்.ஏ. பரணிக்குமார் உள்ளிட்ட திமுக பிரமுகர்களும் படத்தைப் பார்த்தனர்.

தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் அழகிரி சிக்கிய பிறகு, ஸ்டாலினும், அவரும் சேர்ந்து மதுரையில் ஒரு பொது இடத்திற்கு வருவது இதுவே முதல் முறை.
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
அப்பாவின் படத்தை சேர்ந்து பார்த்த ஸ்டாலின், அழகிரி - by Vaanampaadi - 03-07-2005, 03:45 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)