Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழில் பேசி தமிழை வளர்ப்போம்
#2
தமிழில் பேசி தமிழை வளர்ப்போம்*



தமிழுக்கும் அமுதென்றுபேர்...

பால் தமிழ்ப்பால்... என்று தமிழின் பெருமை பற்றிச் சொல்லி வருகிறோம். இதுவெறும் வாய்ச்சொல்லாக மட்டுமே இருந்து வருகிறது. தமிழர்களாகிய நாம் அதற்கு மரியாதை கொடுத்து வருகிறோமா?
தமிழைப் பேசும்போது, யாழ்ப்பாணதமிழ், கண்டி தமிழ், மட்டகளப்பு தமிழ் திருகோணமலை தமிழ் என்று தமிழைக் கொலை செய்கிறோம். உச்சரிப்புக்களிலும் தெளிவில்லாமல் பேசி வருகிறோம். ல, ள, ழ இவற்றின் உச்சரிப்புக்களை மட்டும் தெளிவாகப் பேசினால் தமிழ் வளர்ந்துவிடாது.

இப்போது ஆங்கிலத்தில் பேசுவதை மிகவும் நாகரிகமாக கொண்டுள் ளார்கள் தமிழ் பேசும் மக்கள். இதற்கு காரணம் தொலைக்காட்சிகளும் தான். அதற்காக தமிழைவிட அதிக முக்கியத்துவம் கொடுத்து ஆங்கிலத்திற்கு மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இலங்கையில் சுத்தத்தமிழில் பேச மறுப்பவர்கள் கோடாணு கோடிப்பேர் உள்ளனர். எத்தனையோ ஆங்கில வார்த்தைகளுக்கு சுத்தத்தமிழ் அர்த்தம் தெரியாமலேயே பேசி காலத்தை ஓட்டிக்கொண்டு வருகின்றனர்.

படிப்பறிவு இல்லாத பாமர மக்கள்கூட பேசும் அளவிற்கு ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தி வருகிறோம். டீ, சைக்கிள், பிளைட், ரெயில்வே ஸ்டேஷன், பஸ்ஸ்டாண்ட், போலீஸ் ஸ்டேஷன், நோட்புக், பேஸ்ட் இப்படி ஆயிரம் வார்த்தைகளை ஆங்கிலத்தில்தான் சாதாரணமாக பேசி வருகிறோம். எளிதாகப் புரிவதற்காகவும், புழக்கத்தில் இருப்பதற்காகவும் பேசுகிறோம். தவறில்லைதான். ஆனாலும் இவைகளையெல்லாம் தமிழில் ஏன் பேசக்கூடாது?

இவைகளைத் தமிழில் உச்சரிக்கும்போது கொஞ்சம் தடுமாற்றமும், சிரிப்பும் வரத்தான் செய்யும். இவற்றைத்தமிழில் தமிழர்களாகிய நாம் பேசாமல், ஆங்கிலேயர்களா பேசுவார்கள்? தேநீர், புகைவண்டி நிலையும், குறிப்பேடு, பற்பசை, காவல்நிலையம், பேருந்து நிலையம் இப்படி பேசினால் என்ன? பேசப்பேசப் பழக்கத்திற்கு வந்துவிடும். 10 வருடத்திற்கு முன்பு கம்ப்யூட்டருக்கு அர்த்தம் தெரியாமல் இருந்தவர் கள் நிறையபேர். …கணினி- என்று தெரிந்த பிறகு இப்போது சாதாரணமாகப் புழக்கத்திற்கு வந்துவிட்டது. இதேபோல் என்ஜினீயர் என்பதற்குப் பொறியாளர் என்றும் அழைத்து வருகிறோம்.

தமிழ் என்பது எல்லோருக்கும் பொது. தமிழ் வார்த்தைகளைக் கொன்று, யாழ்ப்பாண பாஷை, திருகோணமலை பாஷை என்று ஏன் இழுத்துப்பேசவேண்டும்? சுத்தமாகப் பேச வேண்டியதுதானே?
CD, CEL PHONE,DRAFT, PLATFORM, LIFT, EMAIL இப்படி ஆங்கில வார்த்தைகளையே பேசிக்கொண்டு வருகிறோம். இவைகளைக்கெல்லாம் தமிழ் அர்த்தம் என்ன? என்று யோசித்துப் பார்த்தோமோ?

இதன் பொருளைக் கவனியுங்கள்.

CD * குறுந்தகடு

LIFT * மின் தூக்கி

CEL PHONE * கையடக்கத் தொலைபேசி

Email* மின் அஞ்சல்

Platform * நடைமேடை

Draft * வரைவோலை
இப்படியான அர்த்தங்கள் எத்தனை பேருக்குத் தெரியும்? இவைகளை நடைமுறையில் சொல்லும்போது நகைச்சுவையாகத்தான் தெரியும். பேசப்பேசப்பழகிவிடும். இலங்கை வானொலியில் சுத்தத் தமிழ் வார்த்தைகளைச் சாதாரணமாகப் பயன்படுத்துகின்றனர். இலங்கை வானொலியைக் கேட்டால் நிறையத் தமிழ் வார்த்தைகளைத் தெரிந்து கொள்ளலாம்.

உதாரணத்திற்கு„ CDவிற்கும் கடையில், …இங்கு குறுந்தகடு வாடகைக்குக் கிடைக்கும்- என்று எழுதியிருந்தால் எல்லோரும் சிரிக்கத்தான் செய்வார்கள். உண்மைத் தமிழ் அதுதானே? ஏன் சிரிக்கவேண்டும்? டீக்கடையில் போய் …ஒரு தேனீர் கொடுங்கள்-என்று கேட்டால் சிரிப்புத்தான் வரும். இதை நினைத்தால் தமிழ்மொழி எப்படி வளரும்?

ஆங்கிலம் தேவைப்படுகிறது. ஆங்கிலமும் தெரிந்துகொள்ளுங்கள். தமிழின் பொருளையும் தெரிந்து பேசக்கற்றுக் கொள்ளுங்கள். நாம் ஆங்கிலத்தில் அதிகம் பேசுவதற்குக்காரணம். …ஆங்கில வழிக்கல்வி- கற்பதாகும். மேலும் மேலை நாட்டு நாகரிகத்தைப் பின்பற்றினால் தான் நம்மை மதிப்பார்கள் என்ற கருத்துக்களைத் தனதாக்கிக் கொள்வதும்தான். தொலைக்காட்சிகள், தமிழை வளர்க்கக் கொஞ்சம் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்.

சமீபத்தில் வேதனையான நிகழ்வு ஒன்று நடந்திருக்கின்றது. அதாவது தமிழ்நாட்டில் தமிழில் தமிழ்த்திரைப்படங்களின் பெயர்கள் இருக்கவேண்டும் என்று சில தலைவர்கள் சொன்னார்கள். இதற்கு சில தலைவர்கள் எதிர்ப்பும் செய்தார்கள். ஏன் எதிர்க்கவேண்டும்? தமிழில் வார்த்தைகளுக்காப் பஞ்சம்? நல்ல தமிழ்ப் பெயர்கள் வைக்கலாமே? ஆங்கிலப் பெயர்கள் கொண்ட திரைப்படங்களை எண்ணிப் பாருங்கள். ப்ரெண்ட்ஸ், ஆட்டோ கிராப் என்ற இரண்டு படங்களைத்தவிர வேறு எந்தப்படமும் சரியாக ஓடவில்லை.

ட்ரீம்ஸ், பாய்ஸ், நியூ, ரெட், டபுள்ஸ், யூத், ஸ்டைல், ஸ்டார், லவ்பேர்ட்ஸ், ஐ லவ்யூடா..., பைவ்ஸ்டார், தி 4 Students இப்படி ஆங்கிலப் பெயர் கொண்ட திரைப்படங்கள் தோல்வி களைத்தான் சந்தித்துள்ளன. ஒருபடம் ஓடினால், அதையே பின்பற்றுவது வாடிக்கையாகிவிட்டது. இதுவெல்லாம் ஒரு மூடநம்பிக்கை. கதை நன்றாக இருந்தால் எந்தப்படமும் ஓடும்.

இனிமேல் தமிழுக்கு மரியாதை கொடுக்க வேண்டுமானால், தமிழ் அர்த்தங்களைத் தெரிந்து கொண்டு, தமிழில் பேசுவதை அதிகமாக்கிக் கொள்ளுங்கள், ஆங்கிலத்தையும் தெரிந்துகொண்டு, தேவையான இடங்களில் பயன்படுத்திக் கொளுங்கள்.

தமிழைத் தமிழன்தான் வளர்க்க வேண்டும். …யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனி வேறெங்கும் காணேன்- என்று பறைசாட்டப்பட்டதிற்கேற்ப, நாம் அன்றாட வாழ்வில் நடந்து கொள்ள வேண்டும்.

வாழ்க தமிழ்

Vaanampaadi
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
தமிழில் பேசி தமிழை வளர்ப்போம் - by Vaanampaadi - 03-07-2005, 03:38 AM
[No subject] - by hari - 03-07-2005, 05:41 AM
[No subject] - by Jude - 03-07-2005, 07:00 AM
[No subject] - by Nilavan - 03-09-2005, 05:39 PM
[No subject] - by Jude - 03-09-2005, 10:32 PM
[No subject] - by Mathuran - 03-10-2005, 04:59 PM
[No subject] - by Nilavan - 03-10-2005, 05:05 PM
[No subject] - by Mathuran - 03-10-2005, 06:38 PM
[No subject] - by Jude - 03-10-2005, 07:47 PM
[No subject] - by Nitharsan - 03-10-2005, 10:57 PM
[No subject] - by Mathuran - 03-10-2005, 11:19 PM
[No subject] - by Eelavan - 03-11-2005, 07:02 AM
[No subject] - by Eswar - 03-11-2005, 12:07 PM
[No subject] - by kirubans - 03-11-2005, 12:52 PM
[No subject] - by Mathuran - 03-11-2005, 02:38 PM
[No subject] - by Mathan - 03-11-2005, 03:15 PM
[No subject] - by Mathan - 03-11-2005, 03:20 PM
[No subject] - by Mathuran - 03-11-2005, 11:50 PM
[No subject] - by KULAKADDAN - 03-13-2005, 07:36 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)