Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜெயலலிதா தங்கிய பங்களாவில் இன்று காலை துப்பாக்கிச்சூடு
#1
ஜெயலலிதா தங்கிய பங்களாவில் இன்று காலை துப்பாக்கிச்சூடு

திருப்போரூர், மார்ச் 6- முதல்வர் ஜெயலலிதா தங்கிய சிறுதாவூர் பங்களாவில் இன்று நரிக்குறவர்கள் நரிகளை துப்பாக்கியால் சுட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள சிறுதாவூரில் கட்டப்பட்டுள்ள புதிய பங்களா வில் ஜெயலலிதா மற்றும் சசிகலா அவரது உறவினர்கள் தங்கி இருப்பது தெரிந்ததே. நேற்று முன் தினம் சட்டசபை கூட்டம் முடித்து விட்டு சசிகலாவுடன் அந்த பங்களாவுக்கு சென்ற ஜெயலலிதா, நாகபூஜை, ராகு-கேது பெயர்ச்சி யாகம் நடத்தினார். நேற்று இரவும் அங்கேயே தங்கினார். இன்று காலை 6 மணிக்கு ஒரு டாடா சுமோ கார் உள்ளே சென்றது. பின்னர் அதே கார் திருப்போரூர் பேருந்து நிலையத்துக்கு காலை 8.30 மணிக்கு வந்தது. அதில் இருந்து 6 நரிக்குறவர்கள் இறங்கினர். அவர்களை சென்னை செல்லும் பேருந்தில் ஏற்றி விட்டு சாதாரண உடையில் இருந்த போலீசார் சென்று விட்டனர். துப்பாக்கி சூடு„ஜெயலலிதாவுக்கு சொந்தமான காரில் 2 நரிக்குறவர்கள் வந்தது ஏன்? அவர்களை போலீசாரே டாடா சுமோவில் வந்து சென்னை பேருந்தில் ஏற்றிவிட்டது ஏன்? என்ற கேள்வி எழுந்தது. இது பற்றி விசாரித்த போது பரபரப்பான தகவல்கள் கிடைத்தன. அது வருமாறு„-

சிறுதாவூரில் கட்டப்பட்ட அந்த பங்களா, 120 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அதில் வன விலங்குகள் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2 தினங்களாக அந்த பங்களாவில் ஜெயலலிதா தங்கிய போது இரவு நேரங்களில் 2 நாள்களும் ஒரு காட்டுப்பூனையும் ஊளையிட்டுக் கொண்டே இருந்தனவாம். நரி ஊளையிட்டால் கெட்ட சகுனம் என்று கருதியதாக கூறப்படுகிறது. எனவே இது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நரியையும் பூனையையும் கொல்ல நரிக்குற வர்களை அழைத்து வாருங்கள் என்று தகவல் பறந்தது. எனவே தான் சென்னையில் இருந்து 6 நரிக்குறவர்களை ஏற்றிக் கொண்டு அந்த கார் வந்தது. அங்கு அந்த நரிக்குறவர்கள் நரி வேட்டை ஆடினர். இரவில் ஊளையிட்ட அந்த 2 நரிகளை நரிக்குறவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். மேலும் ஒரு காட்டுப்பூனையையும் 3 முயல்களையும் சுட்டுக் கொன்றனர். 2 நரிகளையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் கிளம்புங்கள் என்று நரிக்குறவர்களை அனுப்பி வைத்தனர். போகும் போது 3 செத்த முயல்களையும் காட்டுப்பூனையையும் நரிக்குறவர்களிடம் கொடுத்து விட்டனர். இந்த விஷயம் யாருக்கும் தெரியக் கூடாது என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தனர்.

இது சரியா?வன விலங்குகளை கொல்லக் கூடாது என்று சட்டமே உள்ளது. மான் வேட்டை யாடிய பிரபல இந்தி நடிகர் மீது எல்லாம் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அப்படி இருக்கையில் முதல்வர் தங்கிய பங்களாவிலேயே 2 நரி, 3 முயல், காட்டுப்பூனையை சுட்டுக் கொன்றதாக அந்த நரிக்குறவர்களே கூறுகிறார்கள். இதற்கு வழக்கு உண்டா?

பேசிய பணத்தை தராத போலீசார்

நரிகள், முயல்களை சுட வேண்டும். ஒரு நரிக்கு 500 ரூபாய், முயலுக்கு 100 ரூபாய் தருகிறோம் என்று கூறி நரிக்குறவர்களை போலீசார் அழைத்து வந்தனர். அவர்களும் வந்தார்கள். சுட்டுக் கொன்றார்கள். ஆனால் பேசியபடி பணம் தரவில்லை. நரிக்கு 400 ரூபாய் என்று 800 ரூபாயும் முயலுக்கு 100 ரூபாய் என்று 300 ரூபாயும் தந்தனர். காட்டுப் பூனைக்கு காசு கிடையாது என்று போலீசார் திருப்பி அனுப்பிவிட்டனர். பங்களாவில் கொடுத்த 500 ரூபாயில் போலீசார் 100 ரூபாய் கமிஷன் எடுத்தார்களா? அல்லது அவர்களே 400 ரூபாய் தான் கொடுத்தார்களா என்பது தெரிய வில்லை.
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
ஜெயலலிதா தங்கிய பங்களாவில் இன்று காலை துப்பாக்கிச்சூடு - by Vaanampaadi - 03-07-2005, 03:01 AM
[No subject] - by shiyam - 03-07-2005, 01:19 PM
[No subject] - by tamilini - 03-07-2005, 02:48 PM
[No subject] - by வியாசன் - 03-07-2005, 04:19 PM
[No subject] - by Niththila - 03-07-2005, 05:10 PM
[No subject] - by tamilini - 03-07-2005, 05:13 PM
[No subject] - by shobana - 03-07-2005, 07:59 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)