Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கிழக்கில் தாக்குதல்
#4
பொலன்னறுவையில் துப்பாக்கிசூடு; ஆறு விவசாயிகள் பலி

இலங்கையில் பொலன்னறுவை மாவட்டம் வெலிக்கந்தை பிரதேசத்திலுள்ள கொலக்கன்னாவெளி கிராமத்தில் நேற்று சனிக்கிழமை இரவு 6 விவசாயிகள் அடையாளந்தெரியாத ஆயுத பாணிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள்.

இச்சம்பவத்தின்போது ஒரு 3 வயது குழந்தை உட்பட, 3 பெண்கள் காயமடைந்து பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

கொல்லப்பட்டவர்களில் நான்கு பேர் முஸ்லிம்கள், ஒருவர் தமிழவர், ஒருவர் சிங்களவர்.

அடையாளந்தெரியாத துப்பாக்கிதாரகிள் குழுவொன்று அருச்சுனன் செல்வராஜா என்ற விவசாயியையும், சாந்த விஜயசூரிய என்ற விவசாயியையும் அவர்களது வீடுகளில் வைத்து சுட்டுக் கொன்றுள்ளார்கள். சாந்த விஜயசூரியவின் 3 வயது மகள் ஒருவரும், 16 வயது மகள் ஒருவரும் காயமடைந்துள்ளார்கள்.

துப்பாக்கிதாரிகள் அங்கிருந்து செல்லும் வழியில் வீடொன்றிற்கு முன்பாக நின்ற முஸ்லிம் விவசாயிகள் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், அப்போது பெண்ணெருவர் காயமடைந்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வரும் வெலிக்கந்தை பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொல்லப்பட்ட 4 முஸ்லிம் விவசாயிகளும் அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர்கள் என்றும், தொழில் நிமித்தம் அவர்கள் கொலக்கன்னாவெளி கிராமத்தில் வசித்துவந்தார்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிதாரிகள் யாரென்றோ, இச்சம்பவத்திற்கான காரணமோ இதுவரை தெரியவரவில்லை.

இரண்டு விசேட பொலிஸ் குழுக்கள் இச்சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர், இன்று காலை, சம்பவம் இடம்பெற்ற இடத்தை பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையில், தமது கட்டுப்பாட்டிற்குட்பட்ட வாகரைப் பிரதேசத்திலுள்ள கிரிமிச்சையில், நேற்று சனிக்கிழமை, தங்கள் போராளிகள் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவத்திற்கு இலங்கை இராணுவமே பொறுப்பு என விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்ததியுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் இளந்திரையன் இலங்கை போர் நிறுத்த கண்கானிப்புக் குழுவினரிடம் இது பற்றி புகார் செய்துள்ளார்

கால்நடை ரோந்து சென்ற தமது போராளிகள் மூவர் மீது இந்த துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.

ஒருவர் உயிரிழந்துள்ளார், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார் என்றும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூவரில் ஒருவர் சீருடை அணிந்திருந்தார் என்றும் விடுதலைப் புலிகள் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிதாரிகள், அருகிலுள்ள இராணுவ முகாமை நோக்கி தப்பியோடியுள்ளார்கள் என்றும் புலிகள் தமது புகாரில் குறிப்பிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இலங்கை இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் தயா ரத்னாயக்கா புலிகளின் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார்.

BBC Tamil News
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by வியாசன் - 03-06-2005, 01:14 PM
[No subject] - by வியாசன் - 03-06-2005, 02:15 PM
[No subject] - by Mathan - 03-07-2005, 02:17 AM
[No subject] - by Mathan - 03-07-2005, 11:23 PM
[No subject] - by thivakar - 03-08-2005, 12:07 PM
[No subject] - by Mathan - 03-08-2005, 12:18 PM
[No subject] - by Mathan - 03-12-2005, 01:04 AM
[No subject] - by Mathan - 03-27-2005, 10:03 PM
[No subject] - by Danklas - 04-12-2005, 02:07 PM
[No subject] - by Danklas - 04-12-2005, 02:09 PM
[No subject] - by tamilini - 04-12-2005, 02:16 PM
[No subject] - by Danklas - 04-12-2005, 02:23 PM
[No subject] - by kuruvikal - 04-12-2005, 02:30 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)