03-06-2005, 11:32 PM
நட்புடன் பழகிய
நாட்களோ சில
நாட்களை மீறிய - அவன்
நினைவுகளோ பல
மானிடர் மனதை
மலங்கவைக்கும்
காதலின் உணர்வுகளை
கண்விழித்துத் தேடுகிறாள்
கண்டுவிடுவாளா
கருவிழிகளே
விடை கூறுங்கள்
பேதையவள் பேதலித்து
பித்துப் பிடித்தலைய
பிடிவாதம் பிடிக்கிறாளே
பிழையேதுமின்றி
பதிலளித்துவிடுங்கள்
கண்களில் காதல் வழிய
கண்ணீரில் தீ வளர்த்துக்
காத்திருக்கிறாள் காதலி - உன்
காலடித் தளத்தில்
அவள் பூத்திருக்கிறாள்
கற்பனையில் காதலித்து
கண்ணனை கைபிடிக்க
ஆசை கொண்டாள்
ஆண்டாள்
காதலைக் கற்பனையென
நினைப்பவனை
கைபிடிக்க
கனவு கண்டாள்
கன்னியிவள்
மங்கையின் மனதை
மாற்றிய மன்னவனே
அவள் மனதை - நீ
அறியாயோ?
அறிந்து விட்டால்
ஆனந்தம் மட்டும் தான்
ஆடவனே உன் வசம்
நாட்களோ சில
நாட்களை மீறிய - அவன்
நினைவுகளோ பல
மானிடர் மனதை
மலங்கவைக்கும்
காதலின் உணர்வுகளை
கண்விழித்துத் தேடுகிறாள்
கண்டுவிடுவாளா
கருவிழிகளே
விடை கூறுங்கள்
பேதையவள் பேதலித்து
பித்துப் பிடித்தலைய
பிடிவாதம் பிடிக்கிறாளே
பிழையேதுமின்றி
பதிலளித்துவிடுங்கள்
கண்களில் காதல் வழிய
கண்ணீரில் தீ வளர்த்துக்
காத்திருக்கிறாள் காதலி - உன்
காலடித் தளத்தில்
அவள் பூத்திருக்கிறாள்
கற்பனையில் காதலித்து
கண்ணனை கைபிடிக்க
ஆசை கொண்டாள்
ஆண்டாள்
காதலைக் கற்பனையென
நினைப்பவனை
கைபிடிக்க
கனவு கண்டாள்
கன்னியிவள்
மங்கையின் மனதை
மாற்றிய மன்னவனே
அவள் மனதை - நீ
அறியாயோ?
அறிந்து விட்டால்
ஆனந்தம் மட்டும் தான்
ஆடவனே உன் வசம்
" "
" "
" "

