Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒருவகையான உத்தியோகப்பற்றற்ற அரசு
#1
<b>ஒருவகையான உத்தியோகப்பற்றற்ற அரசு</b>

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் வீடுகளை புனரமைப்பதற்கு ஆறு பில்லியன் ரூபாவை அரச முகவர் நிலையங்களுக்கு ஊடாக உலகவங்கி செலவிடும் என்றும் விடுதலைப் புலிகளுடனான கலந்தாலோசனையுடன் இந்த நிதி செலவிடப்படும் என்றும் உலகவங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் பீற்றர் ஹரோல்ட் தெரிவித்தார் என சண்டேரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுடன் நாம் கலந்தாலோசிப்பது குறித்து ஊடகத்துறையின் ஒரு தரப்பும் தாய்நாட்டுக்கான தேசிய இயக்கமும் என்னை கடுமையாக விமர்சித்துள்ளன. உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதி - ஒருவகையான உத்தியோகப்பற்றற்ற அரசு இருக்கிறது என்ற உண்மை பிரகாரமும் அரசாங்கத்துடன் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் அதுவொரு தரப்பு என்பதாலும் சட்டப்படியான பங்குதாரராக இருப்பதற்கு விடுதலைப் புலிகளுக்கு தகுதியுண்டு என்றும் இந்த பேட்டியில் பீற்றர் ஹரோல்ட் தெரிவித்துள்ளார்.

சண்டேரைம்ஸ் வெளியிட்டுள்ள மற்றொரு செய்தியில் யுத்தத்துக்கு பின்னரான புனரமைப்புக்கு நிதியுதவி வழங்கும் அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே ஆகிய கூட்டு தலைமை நாடுகளை கொண்ட குழுவில் சேர்ந்துகொள்ள ஐநா சபை விருப்பம் தெரிவித்தது என்றும் ஆனால் அதனை வேண்டாமென இலங்கை அரசு தடுத்துவிட்டது என்றும் தெரிவித்துள்ளது.

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> சுட்டது உலகசந்தை
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply


Messages In This Thread
ஒருவகையான உத்தியோகப்பற்றற்ற அரசு - by eelapirean - 03-06-2005, 05:37 PM
[No subject] - by KULAKADDAN - 03-06-2005, 05:58 PM
[No subject] - by Mathan - 03-07-2005, 11:41 AM
[No subject] - by Mathan - 03-07-2005, 11:21 PM
[No subject] - by eelapirean - 03-10-2005, 04:05 PM
[No subject] - by Nilavan - 03-10-2005, 05:41 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)