03-06-2005, 10:33 AM
அரசியல்துறை போராளிகள் மீதான தாக்குதலுக்கு நோர்வே கண்டனம்
கிழக்கு மாகாணத்தில் அண்மைக்காலங்களில் இடம்பெற்ற விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் போராளிகள் மீதான தாக்குதலுக்கு தமது கடும் கண்டனத்தினையும்இ கவலையையும் நோர்வே தரப்பு தெரிவித்துள்ளது. கிளிநொச்சியில் நேற்று விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழுவினரை சந்தித்த இலங்கைக்கான நோர்வே தூதர் ஜோன் பிரட்ஸ் கரே இதனை தெரிவித்துள்ளார்.
முன்னதாக விமானப்படை ஹெலி கொப்டர் மூலம் கிளிநொச்சி பொது மைதானத்தை வந்தடைந்த ஜோன் பிரட்ஸ்கர் தலைமையிலான குழுவினரை விடுதலைப்புலிகளின் சமாதான செயலகத்தைச் சேர்ந்த புலித்தேவன் மற்றும் போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு பிரதிநிதிகள் வரவேற்றனர்.
அங்கிருந்து தமிழீழ காவல்துறையினரது பாதுகாப்புடன் கிளிநொச்சியிலுள்ள விடுதலைப்புலிகளின் சமாதான செயலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட தூதர் குழுவினரை அங்கு வரவேற்ற சு.ப.தமிழ்ச்செல்வன் பேச்சுக்களை நடத்தினார். காலை 10.45 மணிக்கு ஆரம்பமான பேச்சுவார்த்தை ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது.
இச்சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களது கேள்விகளுக்கு பதிலளித்த நோர்வே தூதர் கிழக்கில் வைத்து விடுதலைப்புலிகளின் மட்டு. அம்பாறை அரசியல் துறைப்பொறுப்பாளர் கௌசல்யன் உள்ளிட்ட போராளிகள் மீதான படுகொலை மற்றும் மட்டு. அம்பாறை அரசியல்துறை மகளிர் பிரிவு போராளிகள் மீதான துப்பாக்கி சூட்டுச்சம்பவம் என்பவை தொடர்பினில் நோர்வே அரசின் கண்டனத்தையும்இ கவலையையும் தாம் இன்று தெரிவித்துள்ளதாகக் கூறினார்.
அதேவேளை சுனாமி கடல் அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்ட வடகிழக்குப் பகுதிகளில் மீள் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கான இணைந்த செயற்பாடுகள் தொடர்பாக அரசினது பதில் எதனையும் கொண்டு வந்திருந்தீர்களா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்இ இதுபற்றிய எந்தவொரு பதிலினையும் தான் எடுத்துவந்திருக்கவில்லையென தெரிவித்தார்.
அதேவேளை மீண்டும் சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிப்பது தொடர்பாக முன்னேற்றகரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதா? இவ்விடயத்தினில் இலங்கை அரசின் தற்போதைய நிலைப்பாடு என்ன? என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்இ இவ்விடயம் தொடர்பில் அரசினது தற்போதைய நிலைப்பாடு தொடர்பாக தமக்கு ஏதும் தெரிவிக்கப்படவில்லையெனக் கூறினார்.
ஆயினும் இன்றைய சந்திப்பில் ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பாக விடுதலைப் புலிகளின் அரசியல்துறை வட்டாரங்கள் தகவல் எதனையும் தெரிவிக்கவில்லை
சுட்டபழம்
நன்றி வீரகேசரி

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]