03-06-2005, 04:53 AM
ஆயுததாரிகள் மேற்கொண்ட தாக்குதலில் 6 பேர் பலிவெலிக்கந்தை பகுதியில் !
ஜ வாழைச்சேனை நிருபர் ஸ ஜ ஞாயிற்றுக்கிழமைää 06 மார்ச் 2005ää 6:28 ஈழம் ஸ
பொலன்னறுவை மாவட்டம் வெலிக்கந்தை பிரதேசத்திலுள்ள கெக்குராவவெளியில் நேற்றிரவு இரண்டு வீடுகள் மீது இனந் தெரியாத ஆயுதக் குழுவொன்று மேற்கொண்ட தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
நேற்றிரவு 9.30 மணியளவில் குறிப்பிட்ட வீடுகளை முற்றுகையிட்ட பத்துப்பேர் கொண்ட ஆயுததாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்து இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் நான்கு முஸ்லிம்களும்ää தமிழர் ஒருவரும்ää சிங்களவர் ஒருவரும் அடங்குகின்றனர்.
இந்த சம்பவத்தையடுத்து அப்பகுதியில் அச்சமும் பீதியும் நிலவுவதாகவும் அத்தோடு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகின்றது.

TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS