03-05-2005, 11:58 PM
viyasan Wrote:அஸ்வினி கற்புக்கு உங்கள் புதிய இலக்கணம் வரையப்பட்டுவிட்டதா?
கவித்தன்மை இருக்கிற அளவுக்கு உங்களுக்கு நாகரீகம் தெரியவில்லை. நீங்கள் இயலாமையால் உங்கள் கருத்துக்களை கரடுமுரடாக பாவித்ததுபோல் இருக்கின்றது .நானும் உங்கள் போல் வார்த்தைப்பிரயோகம் செய்திருந்தால் களநாகரீகம் கெட்டிருக்கும். தயவுசெய்து நீங்கள் என்னுடைய கருத்துக்கு பதில்தரவேண்டாம்.
நானும் உங்கள் கருத்தை கணக்கில் எடுக்கமாட்டேன்.
நன்றி வணக்கம்.
வியாசனண்ணா நீங்கள் எழுதிய கவிதையில் நாகரீகமான வார்த்தைகளா இருக்கிறது ? நீங்கள் உள்ளாடைவரை உரையாடலாம் ஆனால் உங்கள் நச்சுத்தனமான வார்த்தைகளுக்கு மட்டும் பதில் அதே பாணியில் எழுதக்கூடாது அப்படித்தானே. நல்லது வாழ்த்துக்கள்.
கருத்தைத் கருத்தால் வெல்ல முடியாதபோது வெருட்டுவது இயல்புதான். அதற்காக இப்படியுமா ?
கற்பென்றால் உடல் இழிதல் என்ற உங்கள் அக்காலம் முதலான இக்காலம் வரையான சிந்தனைக்கு முதலில் வாழ்த்துக்கள்.
கற்பென்பது ஆண்களுக்கும்தான். அது பெண்களுக்காக நீங்கள் விதித்தது. ஆக்கிரமிப்பு இராணுவத்தால் அல்லது விருப்பமில்லாமல் ஒருவன் வன்புணர்வு செய்து பெண் கர்ப்படைந்தால் அங்கு உடல் களங்கப்பட்டது ஒருவனால் அதன்சுமையென்பது பெண்ணுக்கு. ஆனால் கற்பென்ற சொல்லை வைத்து அந்தப்பெண்ணையே வதைப்பதுதான் சரியென்று சொல்லும் வல்லமை மிக்க கற்பென்ற வார்த்தையை எந்த நெருப்பில் தீயிடுவது. உங்கள் கருத்துடன்தான் கருத்தாடினேனே தவிர வியாசனென்ற நபருடன் அல்ல.
நான் கவிஞர் அல்ல கவிதை எழுத. என்கருத்தையே சொன்னேன் அவ்வளவே. உங்கள் கருத்துக்கு அவசரமாக பதில் எழுத வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் கருத்துக்கு மட்டுமே பதில் அவ்வளவே. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
:::: . ( - )::::

