08-30-2003, 06:43 AM
[size=18]புதுப் பாஞ்சாலி
ஆகஸ்டு 30, 2003
வீட்டு பத்திரத்தை வைத்து சீட்டாட்டம்: கணவரின் கையை வெட்டினார் மனைவி
சென்னை:
வீட்டின் பத்திரத்தை வைத்து சீட்டாடிய கணவரின் கையை வெட்டினார் மனைவி. பின்னர் பரிதாபப்பட்டு மனைவியே, அவரை மருத்துவமனையில் சேர்த்தார்.
சென்னை தி.நகர் பகுதியில் ஒரு அபார்ட்மென்ட்டில் சூதாட்ட விடுதி இயங்கி வருகிறது. இங்கு பணம் வைத்தும், சொத்துக்களை வைத்தும் சூதாட்டம் நடக்கிறது.
சென்னைக்கே தெரிந்த இந்த சூதாட்ட விடுதி, நம் காக்கிகளின் கண்ணில் மட்டுமே படவே இல்லையாம். மாமூல போய்விடுவதால் இந்த விடுதியை கண்டும் காணாமல் இருக்கின்றனர் போலீசார்.
இந் நிலையில் அங்கு வழக்கம் போல சூதாட வந்த ஒருவர் தன்னிடம் பணம் இல்லாததால், வீட்டுப் பத்திரத்தை வைத்து விளையாடியுள்ளார்.
இது குறித்து அறிந்த அவரது மனைவி ஆவேசத்துடன் அங்கு வந்தார். கையில் காய்கறி நறுக்கும் அரிவாள் மனையுடன் அங்கு வந்தார் மனைவி.
சூதாடிக் கொண்டிருந்த கணவரிடம் வீட்டுப் பத்திரத்தைக் கொடுக்குமாறு கேட்டுள்ளார். அவர் தர மறுக்கவே, கோபமடைந்த மனைவி அரிவாள் மனையால் கணவன் கையை வெட்டினார்.
அலறித் துடித்த கணவரின் இன்னொரு கையில் இருந்த வீட்டுப் பத்திரத்தை பறித்த மனைவி, கணவரையும் தரதரவென கீழே இழுத்து வந்து, அங்கிருந்த ஒரு ஆட்டோவைப் பிடித்து, அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தார்.
நன்றி தற்ஸ் தமிழ்