03-04-2005, 09:33 PM
யாழ் நகரில் வன்முறைகள்
யாழ்ப்பாணத்தில் ஆஸ்பத்திரி வீதியில் இன்று காலை இராணுவச் சிப்பாய் ஒருவர் ஓட்டிச் சென்ற உழவு இயந்திரம் மோதி பள்ளிக்கூட மாணவி ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து யாழ் நகரில் இடம்பெற்ற அசம்பாவித சம்பவங்களின் போது இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தின் போது வயோதிபர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் மேலும் ஒருவர் காயமடைந்ததாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.
இந்த வாகன விபத்தில் காயமடைந்த 12 வயதான நாகேந்திரம் துளசிகா என்னும் மாணவி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மரணமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தை அடுத்து ஆத்திரமுற்ற இளைஞர்கள் வேம்படி மகளிர் கல்லூரி சந்தியில் விமானப்படை ஜீப் வண்டி ஒன்றை தீயிட்டதுடன், அருகில் உள்ள சிறிலங்கா மாவட்ட கிளை அலுவலகத்துக்கும் தீ வைத்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.
அதனையடுத்து வேறு சில இராணுவ நிலைகளைகளையும் கும்பல்கள் தீவைத்ததாக கூறப்படுகிறது.
கட்டுமீறி நடந்து கொண்ட இளைஞர்களைக் கட்டுப்படுத்த இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.
யாழ் பல்கலைக்கழகப் பகுதியில் இராமநாதன் வீதியில் இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தின் போது அங்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்த உரும்பிராயைச் சேர்ந்த நாகன் கதிர்காமர் என்பவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
எனினும் யாருடைய துப்பாக்கிச் சூட்டில் இவர் கொல்லப்பட்டார் என்று தெரியவில்லை என்று யாழ் பொலிஸ் அத்தியட்சகர் கூறியுள்ளார்.
இந்த சம்பவங்கள் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
நிலைமைய கட்டுப்பாட்டில் கொண்டுவர பொலிஸாரும், இராணுவத்தினரும் கண்ணீர்ப் புகைப் பிரயோகமும், தடியடியும் மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்த பதற்றம் காரணமாக யாழ் நகரக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன, நகரம் வெறிச்சோடிக் காணப்பட்டது.
சம்பவ இடங்களுக்கு செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் சிலரும் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்ததாக கூறப்படும் நபர் துப்பாக்கிச் சூட்டில் தான் உயிரிழந்தார் என்பதை மருத்துவர்களால் உறுதி செய்ய முட்யவில்லை என்று போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் சார்பில் பேசவல்ல அதிகாரி ஹெலனா ஒலப்ஸ் கோபிர் கூறினார்.
அதேவேளை விடுதலைப்புலிகள் தூண்டி விட்டதனாலேயே கும்பல் ஒன்று இராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் தயா ரத்னாயக்க கூறியுள்ளார்.
இந்த சம்பவங்கள் குறித்து விடுதலைப்புலிகளுடன் உடனடியாக தொடர்பு கொள்ள முடியவில்லை.
BBC TAMIL NEWS

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>