03-04-2005, 08:34 PM
பலியான மாணவியின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைப்பு
யாழ்ப்பாணம் பரமேஸ்வரா சந்தியில் இன்று மாலை இராணுவத்தினரால் மேற் கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்டவர் ஓய்வு பெற்ற மாநகர சபை தொழிலாளி நாகன் கதிரகாமு வயது 58 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவரது சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று மாலை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை இடம் பெற்ற இராணுவ வாகன விபத்தில் பலியான மாணவி நாகேந்திரன் துளசிகாவின் சடலம் மரன விசாரனையின் பின்பு இன்று மாலை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலதிக நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரம் மரன விசாரனையை மேற் கொண்டார்.
இவரது உத்தரவின் பேரில் இராணுவ வாகன சாரதி பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து சம்பவததையடுத்து இடம் பெற்ற அசம்பாவிதங்களின் போது வேம்படி சந்தியிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகமும் ஆத்திரமடைந்த பொது மக்களினால் சேதமாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது.
இன்று காலை முதல் மாலை வரை யாழ்ப்பான நகரிலும் புறநகர் பகுதியிலும் இடம் பெற்ற இராணுவத்தினருக்கு எதிரான நடவடிக்கையின் போது ஏற்பட்ட அசம்பாவிதங்கள் தொடர்பாக 8 பேர் பொலிசாரினால் கைது செயயப்பட்டுள்ளார்கள்.
இன்று வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு பின்பு குறிப்பிடத் தக்க அசம்பாவிதங்கள் எதுவும் இடம் பெறவில்லை. அமைதி நிலவுகின்றது. இருப்பினும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சுட்டபழம்
நன்றி புதினம்

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]