Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர்: பிரபுதேவா அதிரடி!
#1
எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர்: பிரபுதேவா அதிரடி!


எனக்குத் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர் என்று நடிகர் பிரபுதேவா பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

பிரபல டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்தின் இரண்டாவது மகன் பிரபு தேவா. இதயம், அக்னி நட்சத்திரம், ஜென்டில்மேன் உள்ளிட்ட சில படங்களில் குரூப் டான்ஸர்களில் ஒருவராக வந்து தனது புதுமையான நடனத்தால் அனைவரையும் கவர்ந்த பிரபு தேவா, காதலன் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தவர்.

பிரபுதேவாவின் "ராசய்யா' படம் வெளிவந்தபோது அவருடன் நடனமாடிய ஒருபெண்ணை பிரபுதேவா ரகசியத் திருமணம் செய்து கொண்டதாக பரபரப்பு செய்திகள் வெளியாகின. ஆனால் இதை பிரபுதேவா மறுத்தார்.

இருப்பினும் அந்தப் பெண்ணுடன் பிரபுதேவா ரகசியமாக குடும்பம் நடத்தி வருவதாக கூறப்பட்டுவந்தது. இந் நிலையில் மீனாவுடனும் அவர் கிசுகிசுக்கப்பட்டார். இதை பிரபு தேவாவும், மீனாவும் மறுக்கவில்லை.

தமிழில் வாய்ப்பு மங்கத் தொடங்கியதால் தெலுங்குப் பக்கம் போனார் பிரபு தேவா. அங்கு பாய்ஸ் சித்தார்த், த்ரிஷாவை வைத்து ஒரு படத்தை இயக்கினார். அது சூப்பர் ஹிட் ஆனதால் பிரபு தேவாவுக்கு நிறைய படங்களை இயக்கும் வாய்ப்புகள் வந்துள்ளன.

இந்தச் சூழ்நலையில் தனக்கு திருமணமாகி, 2 குழந்தைகள் இருப்பதாக பிரபு தேவா தெரிவித்து புதிய பரபரப்பை உருவாக்கியுள்ளார். ஒரு வார இதழுக்கு அவர் கொடுத்துள்ள பேட்டியில் இதுகுறித்து விலாவாரியாக தெரிவித்துள்ளார்.


ராசய்யா படம் வெளியானபோது ரகசியத் திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்ட அதே ரமலத் தான் பிரபு தேவாவின் மனைவி.

பிரபுதேவாவின் பேட்டியிலிருந்து சில துளிகள் ...

எனக்கு திருமணமாகி விட்டது. இதை பத்திரிகையாளர்களிடம்நான் தெரிவிக்கவில்லை. ஒரு இடைவெளி விழுந்து விட்டது. அது நானாக ஏற்படுத்திக் கொண்டதுதான்.

எனது மனைவி பெயர் ரமலத். என்னுடன் நடனமாடியபோது ஏற்பட்ட சினேகம், மனசுக்குள் ஏற்பட்ட வசந்தம். எங்களுக்கு ராஜு, ரிஷி என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ஒருவன் பள்ளிக்கூடத்துக்கு (?) போய்க்கொண்டுள்ளான். இன்னொருவன் போகத் தயாராகிக் கொண்டிருக்கிறான். நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் பிரபு தேவா.

பிரபு தேவாவின் பேட்டி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தினாலும் இன்னொரு கேள்வியும் எழுகிறது.

தனிப்பட்ட வாழ்க்கையை யாரும் கேள்வி கேட்க முடியாது, விமர்சிக்க முடியாது என்றாலும் தனக்கு வாழ்வளித்த ரசிகர்களுக்குக் கூட அதைத் தெரிவிக்காமல் மறைத்து, 2 குழந்தைகள் பெற்று, அவர்கள் பள்ளிக் கூடத்திற்குப் போகும் வரை அதை தெரிவிக்காமல் இருந்ததது அவர்களை ஏமாற்றுவது போலல்லவா?

Thatstamil
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர்: பிரபுதேவா அதிரடி! - by Vaanampaadi - 03-04-2005, 06:36 PM
[No subject] - by Niththila - 03-05-2005, 02:05 AM
[No subject] - by kavithan - 03-05-2005, 02:41 AM
[No subject] - by eelapirean - 03-05-2005, 04:25 PM
[No subject] - by thamizh.nila - 03-22-2005, 01:14 PM
[No subject] - by thivakar - 03-22-2005, 02:18 PM
[No subject] - by thamizh.nila - 03-22-2005, 02:44 PM
[No subject] - by tamilini - 03-22-2005, 02:47 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)