03-04-2005, 06:22 PM
<img src='http://p.webshots.com/ProThumbs/58/8158_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>
<b>என்றோ
என்னை உன்னுள்
தொலைத்ததற்காய்
உன்னுள் என்னை
இன்றும் தேடுகிறேன்.
நீயும் என்னைத்தொலைத்து
விட்டதை
நீ
உன்னை இன்னொருத்தியிடம்
தேடுவதைக்கண்டு
புரிந்து கொண்டேன்.
வெட்ட வெட்ட
தளைக்கும் நகமா நான்.
வேர்கள் வெட்டப்பட்ட
மரம் அல்லவா நான்.
இனி எங்கனம் வளர்வேன்
காதலிக்க மனம் வேணும் என்றாய்
அது உன்னிடம் இல்லை என
இன்று தான் புரிந்து கொண்டேன்
மெனமாய் விக்கி
அழுகிறது நினைவுகள்.
அடங்கிப்போகும் என
அடக்கி அடக்கி
வைத்துப்பார்த்தேன்
யாரடி நீ - என்னை
அடக்கிடவென
கேள்வியுடன்
ஓவென கண்கள் மாரி
பொழிகிறது
காதலெனும் பெருங்கடலில்
நடுக்கடலில் நான்
தத்தழிக்கிறேன்
நாம் நண்பர்கள் என்று.
நீ என்னை வெட்டிவிட்டதனால்.
காதலின் இலக்கனமே
சொல்லாமல் புரிதல் தானே..
இலக்கனமே இல்லாமல்
என்னுள் ஒருகாதல்.
கனம் என் மனதில்
கணம் பண்ணி
உன்னைக்காதலித்ததனால்
வாழ்வின் கால் வழியில்
செல்வழி அறியாது
மௌனமாய் வரைகிறேன்
உயிர்க்காதலை
மைகொண்டு காகிதம் தனில்
காகிதமாய் என் காதலை
கடாசி எறிய முடியாது
பசுமரத்தாணியாய்
அறைந்தல்லவா இருக்கிறது.
ஆழ்மனதில்
வேரோடு என்னை
வெட்டியெறிந்து விட்ட பின்னரும்....!</b>
<b>என்றோ
என்னை உன்னுள்
தொலைத்ததற்காய்
உன்னுள் என்னை
இன்றும் தேடுகிறேன்.
நீயும் என்னைத்தொலைத்து
விட்டதை
நீ
உன்னை இன்னொருத்தியிடம்
தேடுவதைக்கண்டு
புரிந்து கொண்டேன்.
வெட்ட வெட்ட
தளைக்கும் நகமா நான்.
வேர்கள் வெட்டப்பட்ட
மரம் அல்லவா நான்.
இனி எங்கனம் வளர்வேன்
காதலிக்க மனம் வேணும் என்றாய்
அது உன்னிடம் இல்லை என
இன்று தான் புரிந்து கொண்டேன்
மெனமாய் விக்கி
அழுகிறது நினைவுகள்.
அடங்கிப்போகும் என
அடக்கி அடக்கி
வைத்துப்பார்த்தேன்
யாரடி நீ - என்னை
அடக்கிடவென
கேள்வியுடன்
ஓவென கண்கள் மாரி
பொழிகிறது
காதலெனும் பெருங்கடலில்
நடுக்கடலில் நான்
தத்தழிக்கிறேன்
நாம் நண்பர்கள் என்று.
நீ என்னை வெட்டிவிட்டதனால்.
காதலின் இலக்கனமே
சொல்லாமல் புரிதல் தானே..
இலக்கனமே இல்லாமல்
என்னுள் ஒருகாதல்.
கனம் என் மனதில்
கணம் பண்ணி
உன்னைக்காதலித்ததனால்
வாழ்வின் கால் வழியில்
செல்வழி அறியாது
மௌனமாய் வரைகிறேன்
உயிர்க்காதலை
மைகொண்டு காகிதம் தனில்
காகிதமாய் என் காதலை
கடாசி எறிய முடியாது
பசுமரத்தாணியாய்
அறைந்தல்லவா இருக்கிறது.
ஆழ்மனதில்
வேரோடு என்னை
வெட்டியெறிந்து விட்ட பின்னரும்....!</b>
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

