08-29-2003, 05:42 PM
<span style='font-size:25pt;line-height:100%'>இரும்பு மனுஷி</span>
இந்தியாவின் இரும்பு மனுஷி என்று வர்ணிக்கப்படுபவர் மல்யுத்த வீராங்கனை கீத்திகா ஜாகர்! 18 வயதே ஆன இவர் சர்வதேச மல்யுத்த போட்டிகளில் ஏராளமான பதக்கங்களை அள்ளி இருக்கிறார்!
இவர் கனடாவில் நடந்த காமன் வெல்த் போட்டியில் 63 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்தார்.
2001-ம் ஆண்டு நடந்த தேசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம், 2002-ல் ஐதராபாத்தில் நடந்த தேசிய போட்டியில் தங்கம், அதே ஆண்டில் துருக்கியில் நடந்த போட்டியில் தங்கம்... என்று கீத்திகா பெற்ற வெற்றிகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இனி மல்யுத்த மன்னி கீத்திகா சொல்கிறார்.
எனக்கு சின்ன வயசுல இருந்தே மல்யுத்தம், குத்துச்சண்டை போட்டின்னா ரொம்ப இஷ்டம், என்னோட ஆர்வத்தை அறிந்த அப்பா எனக்கு மல்யுத்த பயிற்சிக்கு அனுப்பினார்.
சர்வதேச அளவில் வெற்றி பெறணுங்கிற வெறி இருந்ததுனால நான் தினமும் 7 மணி நேரம் பயிற்சி செய்தேன்!
என்னோட கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைச்சுருக்கு 18 வயசுக்குள்ளேயே நான் ஏராளமான தங்கப்பதக்கம் வாங்கி இருக்கேன். இது எனக்கே பிரமிப்பாகத்தான் இருக்கு!
நான் இன்னும் செய்ய வேண்டிய சாதனை நிறைய இருக்குது, அதற்காக புதிய புதிய நுணுக்கங்களை கத்துட்டு இருக்கேன்!
நான் பழைய டெக்னிக்கையெல்லாம் கடைபிடிக்க கூடாதுன்னுதான் மல்யுத்தம் பற்றிய புத்தகங்களை படிப்ப தில்லை. அதில் பெரும்பாலும் மற்ற வீராங்கனை களுக்கும் தெரிந்த டெக்னிக்கைத்தானே சொல்லி இருப்பார்கள்! என்று கடகட வென பேசிக்கொண்டே போன கீத்திகா விடம். உடம்பை இப்படி இரும்பு மாதிரி வச்சுருக்கீங்களே. அப்படி என்னதான் சாப்பிடறீங்க? என்றோம்.
இதுல ரகசியம் ஒண்ணும் இல்லீங்க. நான் சுத்த சைவம்! இதுவரையிலும் அசைவ உணவை கொஞ்சம் கூட டேஸ்ட் பண்ணியதில்லை.
வெளிநாடுகளுக்கு போகும்போதுதான் சாப்பாட்டு விஷயத்துல நான் ரொம்பவே சிரமப்படுவதுண்டு! அங்கெல்லாம் நல்ல சைவ உணவு கிடைக்காது. ஆனாலும் ருசி எப்படி இருந்தாலும் கஷ்டப்பட்டு நிறைய சாப்பிடுவேன். நல்லா சாப்பிட்டால்தானே எதிராளியை வீழ்த்த முடியும்" என்கிறார் கீத்திகா!
மல்யுத்தத்தில் இவரது ரோல் மாடல் இந்திய மல்யுத்த வீரர்காமா பல்வான்.
அரியானாவில் உள்ள ஜாட் கல்லூரியில் படித்து வரும் கீத்திகா ஜாகர் சிறப்பு பயிற்சி பெற ஜப்பான், கனடா போன்ற நாடுகளுக்கு செல்ல இருக்கிறார்.
நிïயார்க்கில் விரைவில் உலக சீனியர் மல்யுத்தப்போட்டி நடைபெற உள்ளது. அதில் இவரும் கலந்து கொள்ள இருக்கிறார். இப்போட்டியில் வென்றால் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்து விடும்.
என்னுடைய லட்சியமே ஒலிம்பிக்கில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தருவதுதான்! அந்த லட்சியத்தை என்னால் அடைய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்கிறார் கீத்திகா நம்மை மல்யுத்த லுக் விட்டபடியே!
நன்றி மாலைமலர்