Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பெண் போராளிகள் மீது தாக்குதல்
#37
பயண அறிவுறுத்தலை புலிகள் அலட்சியப்படுத்துவதாக படைத்தரப்பு குற்றச்சாட்டு

இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பயணம் மேற்கொள்ளும் புலி உறுப்பினர்கள் படையினருக்கு அறிவித்து அவர்களது பாதுகாப்புடனேயே பயணம் மேற்கொள்ள வேண்டுமென பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளபோதிலும், புலிகள் அவ்வறிவுறுத்தலை தொடர்ந்தும் புறக்கணித்து வருவதாக படையினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மட்டக்களப்பில் கடந்த 28 ஆம் திகதி இடம்பெற்ற புலிகள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாதுகாப்பமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் திருக்கோவில் பகுதியில் முச்சக்கர வண்டியில் பயணஞ் செய்துகொண்டிருந்த 3 பெண் போராளிகளை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்ற இனந்தெரியாத நபரொருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அப்போராளிகள் காயமடைந்துள்ளனர். கடுமையான காயங்களுக்குள்ளாகியிருந்த அவர்கள் விசேட அதிரடிப்படையினரால் கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் விமான மூலம் கொழும்பிற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் பின்னர் ஏற்பட்ட இணக்கப்பாட்டின்படி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுள் விஜயம் செய்யும் புலி உறுப்பினர்கள் படையினருடன் தொடர்புகொண்டு தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகளைச் செய்துகொள்ளவேண்டும்.

ஆனால், அண்மைக் காலத்தில் இந்த இணக்கப்பாட்டைப் புலிகள் பலமுறை மீறியுள்ளனர். இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் புலிகளுக்குப் பலமுறை அறிவுறுத்தியுள்ளார். இவ்வறிவுறுத்தல்கள் புறக்கணிக்கப்பட்டதன் விளைவாக பலமுறை அனர்த்தங்கள் நிகழ்ந்துள்ளன. அண்மைய சம்பவமாக கௌசல்யன் மற்றும் முன்னாள் எம்.பி.சந்திரநேரு ஆகியோரின் படுகொலைச் சம்பவங்கள் அமைந்துள்ளன. இச்சம்பவத்தின் பின்னரும், பாதுகாப்புப் படையினர் விடுதலைப் புலிகளின் பயணத்திற்குப் பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.

ஆனால், விடுதலைப் புலிகள் பாதுகாப்புப் படையினரின் இவ்வறிவுறுத்தலை தொடர்ந்தும் உதாசீனம் செய்துவருகின்றனர். கடந்தவாரம் இராணுவத்திற்கு அறிவிக்காது படையினரின் பாதுகாப்பின்றி புலித்தேவன் மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

அண்மையில்கூட பாதுகாப்புப்படையினரின் அறிவுறுத்தல்களை உதாசீனம் செய்து படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியினுள் பயணஞ் செய்துகொண்டிருந்த புலிப் போராளிகள் மீது இனந்தெரியாத ஆயுததாரி மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 3 பெண் போராளிகள் காயமடைந்துள்ளனர்.

தற்போது அந்த 3 போராளிகளும் ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைய மருத்துவ சிகிச்சைக்காக கொழும்பிற்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.

தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 02-28-2005, 05:30 PM
[No subject] - by Mathuran - 02-28-2005, 05:30 PM
[No subject] - by Mathan - 02-28-2005, 05:41 PM
[No subject] - by tamilini - 02-28-2005, 05:43 PM
[No subject] - by eelapirean - 02-28-2005, 06:04 PM
[No subject] - by Vaanampaadi - 02-28-2005, 06:50 PM
[No subject] - by Mathan - 02-28-2005, 06:54 PM
[No subject] - by tamilini - 02-28-2005, 06:58 PM
[No subject] - by Mathan - 02-28-2005, 07:02 PM
[No subject] - by Mathuran - 02-28-2005, 07:05 PM
[No subject] - by Vaanampaadi - 02-28-2005, 08:07 PM
[No subject] - by Vaanampaadi - 02-28-2005, 08:09 PM
Senior LTTE political official shot - by AJeevan - 02-28-2005, 08:51 PM
[No subject] - by vasisutha - 02-28-2005, 11:47 PM
[No subject] - by வியாசன் - 03-01-2005, 11:52 AM
[No subject] - by Mathan - 03-01-2005, 02:25 PM
[No subject] - by Vaanampaadi - 03-01-2005, 09:06 PM
யார் இவர்? - by eelapirean - 03-02-2005, 04:15 PM
[No subject] - by MEERA - 03-03-2005, 02:42 AM
[No subject] - by Mathan - 03-03-2005, 12:50 PM
[No subject] - by tamilini - 03-03-2005, 06:31 PM
[No subject] - by eelapirean - 03-03-2005, 06:49 PM
[No subject] - by வியாசன் - 03-03-2005, 07:12 PM
[No subject] - by shiyam - 03-03-2005, 07:16 PM
[No subject] - by Mathan - 03-03-2005, 09:51 PM
[No subject] - by Mathan - 03-04-2005, 10:10 AM
[No subject] - by Mathan - 03-04-2005, 02:01 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)